ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, December 1, 2009

உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்நீர்க்குமிழிகள்...

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

கற்றுக் கொள்...

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

எயிட்ஸ் - குறுங்கவிதை

கலியுக எமதர்மனின்
நவயுக எம வாகனம்
ஏப்பு நோயெனும் எயிட்ஸ்

(இன்று உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம்... அதற்கான சிறப்பு கவிதைகள் இங்கே... முன்பே இவைகளெல்லாம் எழுதப்பட்டவை என்றாலும்... இன்றைய தினத்திற்கு சரியாக இருக்குமென்பதால் மீள்பதிவாய் இங்கே...)No comments: