ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 17, 2010

யார் பெண்ணே நீ..?


கார்மேகத்தினைப் போலிருக்கும்
உனது கருங்கூந்தல்...
அதில் மூன்றாம் பிறை நிலவு
போலிருக்கும்
உன்னுடைய அழகு நெற்றி…
அதன்கீழே
கரிய நிறம் கொண்ட
வானவில்லைப் போலிருக்கும்
உனது அழகு புருவங்கள்…
வெட்டித் தெறிக்கும் மின்னலைப்
போலிருக்கும் உன்னிரு மின் விழிகள்..
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரங்களைப் போலிருக்கும்
உனது புன்சிரிப்பு…
மாலை நேரத்து செங்கதிரோனை
அளவாக வெட்டியெடுத்தது
போலிருக்கும் உனது செவ்விதழ்...
வெண்மேகப் பட்டாடை போலிருக்கும்
உனது பட்டாடை...
எதைச் சொல்ல... எதை விட...
இத்தனையும் உன்னொருத்திக்கே
ஒரு சேரப் பொருந்துகிறதே
யார் பெண்ணே நீ..?

அணு அணுவாய் உனை
ரசித்தபிறகுதானடி தெரிகிறது
என் மன வானத்தின்
காதல் தேவதை நீயென்று..!
(அதை வார்த்தைகளில் வடிக்கும்
கவிஞன் நானென்று..!)




16 comments:

பனித்துளி சங்கர் said...

காதல் கசிகிறது மெல்ல கவிதையில்

மோகனன் said...

வாங்க சங்கர்...

ரொம்ப நாளைக்குப் பிறகு நம்ம குடிலுக்கு வரீங்க... நன்றி..!

மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குங்க... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Nattar Jothi said...

vai thiranthale varthai aruvi kottukirathe...

Ayyo
Mohanan
Ungal Varthai aruviyil nanaindhu
kuliral nadungum
penmayilai nan ippothu!

Kathiravanai kanda Sooriyakandhiyai
Moganan mail kandu
mugam Silirththu inngu nan!

மோகனன் said...

உங்களை நீங்களே பெண் மயில் என வர்ணிக்கும் போதே தெரிகிறது... நீங்களும் ஒரு கவிதை என்று....

ஒரு கவிதைக்கே இந்த கிறுக்கனின் கிறுக்கல் பிடித்திருக்கிறது என்றால்... அதை விட வேறு மகிழ்ச்சி ஏது எனக்கு...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

நாணல் said...

//அணு அணுவாய் உனை
ரசித்தபிறகுதானடி தெரிகிறது
என் மன வானத்தின்
காதல் தேவதை நீயென்று..!
(அதை வார்த்தைகளில் வடிக்கும்
கவிஞன் நானென்று..!) //

வழக்காமான வர்ணிப்பாயிருந்தாலும் முடிக்கும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கீங்க...

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

தாங்கள் சுட்டியது முற்றிலும் உண்மைதான்... முடிப்பதில்தான் இந்த கவிதையின் சாரத்தை இறுத்தி வைத்தேன்...

கண்டு கொண்டு உமக்கு நன்றி சொல்லி... இணைந்தமைக்கு இன்னொரு நன்றி சொல்லி நவில்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Swathika T said...

nice to read your kavithai...

மோகனன் said...

ஒரு கவிதையே எனது கவிதையைப் பாராட்டுகிறது எனில் அதை விட பாக்கியம் வேறேதுமில்லை...

தங்களின் அன்பிற்கு எனது நன்றிகள்...

tamil cinema said...

மிகவும் இனிமை :)

"தாரிஸன் " said...

நல்லா இருக்குங்க

மோகனன் said...

தமிழ் சினிமாவின் மனம் திறந்த பாராட்டிற்கு எனது நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க தாரிஸன்

தங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு எனது நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Nattar jothi said...

kirukkalil ethanayo kavithaikal pola
Ungal kirukkalil ithanai kaviyangala!

மோகனன் said...

நன்றி தோழி...

என் கிறுக்கலுக்கும் மதிப்பிருக்கிறது என்று நம்புகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்கிறேன்..!

Madhu said...

இவள் தான் தங்களின் காதல் தேவதையோ,
இவளாக, இருந்தால் உண்மையில் இவள் உங்கள் மன வானத்தின் காதல் தேவதை தான்

மோகனன் said...

என் மனதில் உள்ளவள்தான் என் காதல் தேவதை...

வருகைக்கு நன்றி...