ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 7, 2011

ஈழத்தமிழ் மண்ணுக்கே..!


இன்னுயிர் தமிழ் மறவா
ஈழத்தமிழர் இலங்கையில்
சுதந்திரப் போரை நடத்தினர்..!

மாவீரன் பிரபாகரன்
தலைமையில் ஒன்றிணைந்து
தனிநாடு கேட்டு நின்றனர்..!

எதிரிகளோ எம்தமிழரை
எள்ளி நகையாடினர்
எங்கும் துன்பத்தை இழைத்தனர்

திகதி தோறும் நல்பொழுது
விடியாதா என விழித்திருந்தோரை
அகதியாக்கி விரட்டினர்..!

பொறுத்தது போதுமென்று
வீர மறவப் புலிகள்
போர் முரசம் கொட்டினர்..!

வெங்குருதி பெருகினாலும்
செங்குருதி மருகினாலும்
சுதந்திரம் வேண்டி போரிட்டனர்!

செஞ்சோற்றுக் கடனாற்ற
செந்தமிழர் வருவானென்று
ஈழத்தமிழர் எதிர் நோக்கவில்லை!

எதிரிகளைச் சிதறடிக்க
எமதிரு தோள்கள் போதுமென்று
பொருதிப் பார்த்தனர்!

உலகெங்கும் உள்ள
பொல்லாத ஓநாய்களுடன்
கை கோர்தது எதிரிப்படை..!

எப்படை வரினும்
எத்துயர் வரினும்
எம்தமிழர் அசரவில்லை!

இறுதி மூச்சு உள்ளவரை
ஈழத்தமிழ் மண்ணுக்கேயென
இன்னுயிரை ஈந்தனர்..!

அவ்வெஞ்சமரில் பாழாய்ப்போன
வஞ்சகர்களின் சதியால் - பல
இசைப்பிரியாக்கள் அழிந்தனர்..!

பல மாவீரர்கள் தங்கள்
மதிப்பற்ற உயிர்களை - ஈழத் தமிழ்
மண்ணுக்கீந்தனர்..!

எம் தமிழ் தலைவர்
அப்போரில் வீர மரணம் எய்து
இறவாப் புகழடைந்தார்..!

ஈழம் அழிந்ததென்று
எதிரிகள் எக்காளமிட்டனர் - உலகமதிர
போர்குற்றங்கள் புரிந்தனர்..!

வேதனைகள் அரங்கேறுவதை
உலகமே வேடிக்கைதான் பார்த்தது...
தடுப்பார் யாருமில்லை..!

ஏ... ஈனங் கெட்ட எதிரிகளே...
போர்முறை தெரியாப் புல்லர்களே
புழுவினும் கீழானவர்களே..!

நாங்கள் மண்ணில் புதையவில்லை
ஒவ்வொருவரும்
விதைக்கப் பட்டிருக்கிறோம்..!

பீனீக்ஸ் பறவை போல்
மீண்டெழுவோம்...
தமிழரை நிலை நாட்டுவோம்..!

(இசைப் பிரியா கொடுராமாக கொலை செய்யப்பட்டது முதலே மனதில் வலி இருந்து கொண்டே இருந்தது... அதை மிகத் தாமதாகப் பதிவு செய்திருக்கிறேன்...  ஈழத்தில் பிறந்திருந்தால். என்னுயிரைக் கொடுத்து ஈழத்தை மீட்டிருப்பேன்... தமிழகத்தில் பிறந்து தொலைத்ததால், ஈழத் தமிழனுக்கு உதவாத ஈனப்பிறவியாகி விட்டேன்... ஈழத் தமிழர்களே எனை மன்னியுங்கள்...)
18 comments:

சே.குமார் said...

நல்ல கவிதை நண்பா.
நம் மக்கள் படும் கஷ்டம் கொஞ்சமா நண்பா.

Rathi said...

கவிதை உணர்வுபூர்வமாக உள்ளது. ஈழத்துக்காக நீங்கள் செய்யவேண்டிய கடமைகள் இன்னும் உண்டு. காலம் வரும்.

மோகனன் said...

நம்மக்கள் படும் துயர் விரைவில் தீரத்தான் போகிறது நண்பா...

அதற்காக நாம் கொடுத்திருக்கும் விலை கொஞ்சமல்ல... நஞ்சமல்ல..!

மோகனன் said...

கண்டீப்பாக ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.. தோழி...

காலம் வரும்... கட்டாயம் கடமையாற்றுவேன்..!

Raja sekar said...

nanri thola..!

மோகனன் said...

நன்றிகள் வேண்டாம் தோழா... நம்மவர்க்கு நல்லது நடந்தால் போதும்..!

Anonymous said...

Nandri thozha romba nalla erukku......................

ANJALI said...

Entha poraattathin mudivu than Eanna........


BY "ANJALI"

மோகனன் said...

பெயர் சொல்லாமல் போன நண்பரே...

போரட்டத்திற்கு நன்றி எதற்கு... போராட ஆள் துணை வந்தால் போதும்..!

மோகனன் said...

தமிழ் ஈழம் மலர்வதுதான் அப்போராட்டத்திற்கு முடிவு...

அப்பொன்னாள் வரும் நாள்... வெகு தொலைவில் இல்லை அஞ்சலி..!

Arun Kumar said...

super sir..!

மோகனன் said...

வாங்க அருண்குமார்...

தமிழர்க்கு ஏதேனுமொன்றைச் செய்ய வாங்க..!

Sivakumar arjunan said...

டியர் சார்

உங்கள் கவிதையை படித்தேன். மிக நன்றாக இருந்தது, ஒரு சில எழுத்து பிழைகளைத்தவிர. அதிலும் அந்த ஈழத்து மக்களின் கஷ்டங்களை சுட்டிக்காட்டியதும் மிக நன்றாக இருந்தது. கடவுள் உங்களுக்கு அனைத்து திறமைகளையும் கொடுத்துள்ளார். அந்த கடவுளுக்கும் உங்களுக்கும் மிக நன்றி.

இந்த ஈழத்து மக்களுக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கவும், , நல்ல மன அமைதி கிடைக்கவும் அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்வோம். இதுதான் தற்போதுக்கு என்னால் முடிந்தது.

மீண்டும் சந்திப்போம்,
இப்படிக்கு,
அன்புள்ள,
அ. சிவக்குமார்.

மோகனன் said...

வாங்க சிவக்குமார்

தமிழ் ஈழம் மலரும் அப்பொன்னாள் வரும் நாள்... வெகு தொலைவில் இல்லை..!

கவி இயற்றும் திறனை என் பெற்றோரும், தமிழ் மண்ணும், தாய்த்தமிழும், என் காதலியும் கொடுத்த வரம்...

கடவுளல்ல... நல்ல மனிதர்கள் மட்டுமே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அண்ணாமலையார் said...

உண்மை தமிழரின் தாகம் தமிழ் ஈழம்
உறங்கிடோம் உறுதி கொண்டோம்
தமிழரின் தாகம் தமிழ் ஈழம்
தமிழரின் தாகம் தமிழ் ஈழம்

மோகனன் said...

உண்மைதான் தோழா...

தாகம் விரைவில் தீரும்..!
தமிழ் ஈழம் விரைவில் மலரும்..!

Natu said...

கவி இயற்றும் திறனை என் பெற்றோரும், தமிழ் மண்ணும், தாய்த்தமிழும், என் காதலியும் கொடுத்த வரம்...


Yar antha kathalinu than sollamatrenga kandu pidikerom
ungalin kavithai varikalai vaithu ungal kathali yar ena kandu pidikeren.

By

Bhuvana

மோகனன் said...

முயற்சியுங்கள்...