ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, March 21, 2011

உன் பிரிவில் என் தனிமை..!


மலர்ந்த காம்பை விட்டு
மலர் சென்றால்...
தனித்தழும்
மலர்க் காம்பைப் போல...
அமாவாசையன்று
நிலவைக் காணாமல்
மலராத அல்லியைப் போல...
தன் இணையது
பிரிந்து விட்டால்
ஏதுமருந்தாமல்
தனித்திருக்கும்
அன்றில் பறவை போல...
உன் பிரிவால் நானுமிங்கே
தவித்துப் போகிறேன்...!
தனிமையில் சாகிறேன்..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!




12 comments:

Radha N said...

nice...

மோகனன் said...

ரசித்தமைக்கு நன்றி நாகு..!

Unknown said...

neeyum nanum ondrey andrallavo.... piragenna pirivu... neeyea nanaga irukkumpothuthanimy yenbathu yeathu. unnakul irrukum yennai yean viduvikka marukirai. nice kavithy

கலா said...

மலர்ந்த காம்பை விட்டு
மலர் சென்றால்...
தனித்தழும்
மலர்க் காம்பைப் போல\\\\\\\\\

நான் கம்புடன்மிட்டாய்{குச்சிமிட்டாய்}
கொடுக்கிறேன் சமந்தில்ல...அழாதேடா...
சத்தம் தாங்கமுடியல்ல....

கவிஞரே! தனிமை
கொடுமையா?
நோக்குத் தெரியாதோ அம்பி
தனிமையிலே இனிமை காண.....


என் தனிமையைக் கொன்று விடு..!\\\\\
தனி மையைக் கொன்றால்...
பாவம்! அந்தப் பேனாவுக்கல்லவா?
கவி மையில் கொட்டுமோ!?

மோகனன் said...

வருகைக்கும், அழகான பின்னுட்டத்திற்கும் நன்றி விஜி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க கலா...

குச்சியை காட்டினால் குழந்தை அழும், இக்குழந்தைக்கு மிட்டாய் என்றாலே உவ்வே...

தனிமையில் இனிமை காண என்னால் முடியாது...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

natarajanp said...

Antha Thanimaiyilum alagana Enimai ullathu enpathai marathirkala Nanba......

By Bhuvana

natarajanp said...

Antha Thanimaiyilum alagana Enimai ullathu enpathai marathirkala Nanba......

Antha Thanimai unarnthu parunkal....
By Bhuvana

மோகனன் said...

என்னால் தனியாக இருக்க முடியாது புவனா...

என் கவிதையோடு இருக்கத்தான் விரும்புவேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

உணர்ந்து பார்த்ததால்தான் சொல்கிறேன் புவனா...

என் கவிதையோடு இருக்கத்தான் விரும்புவேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Jothi said...

seekiram vandhiduval sinna kanna,
un thanimayai thavirthiduval mogana ...

superb....


Jothi

மோகனன் said...

வருகைக்கும், தங்களின் ரசனைக்கும் மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க.!