வெண்மேகத்தின் விழுதானாய்..!
பூமிக்கே நீ அமுதானாய்..!
விளை நிலங்களுக்கு வித்தானாய்..!
விவசாயிகளின் முத்தானாய்..!
உயிரினங்களிக்கெல்லாம் உயிரானாய்..!
உலகெங்கும் உறைபனியானாய்..!
தாய் வயிற்றில் பனிக்குடமானாய்..!
தாய் மார்பில் பாலானாய்..!
உலகில் நீ நதிகளின் ஊற்றானாய்..!
தாய் மார்பில் பாலானாய்..!
உலகில் நீ நதிகளின் ஊற்றானாய்..!
உயிர்த் தாகத்திற்கு மருந்தானாய்..!
எவரெஸ்ட்டில் பனிக்குன்றானாய்..!
எழில் சூழ்கடலில் சுனாமியானாய்..!
எல்லாவற்றிலும் நீயானாய்..!
எங்கெங்கும் நீக்கமற நீரானாய்..!
இனி வருங்காலத்தில்
உனை வீணாக உருக்குலைத்தால்
உயிர்களுக்கு உலையாவாய்..!
உனை உளமாற சேமித்தால்
உலகிற்கே நீ வளமாவாய்..!
உன் தன்னமலற்ற தனிப்பண்பால்
நின் திருத்தாழ் பணிகிறேன்
நீரே என் ரெம்பாவாய்..!
நீரே என் ரெம்பாவாய்..!
(மார்ச் 22 - அ(இ)ன்று உலக தண்ணீர் தினம். ஆதால்தான் இந்த தண்ணீர் பற்றிய சிறப்புக் கவிதை. நீரை சேமிப்போம்... உலகைக் காப்போம்)
16 comments:
"நீரின்றி அமையா இவ்வுலகு " என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியும் நம்மாளுக இன்னும் திருந்தல..
ட்ரை பண்ணுவோம் :)
//பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே //
ரெண்டாயிரம் வருடத்திற்கு முன் !
கவிதை அருமை நண்பரே...
வாங்க யூர்கன்...
மூத்தவங்க சொல்லை மதிச்சிருந்தா... தொல்லை ஏதுமில்லை என்பதை நம் தற்காலச் சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறது... என்ன செய்ய...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
யூர்கன் உலகம் தோன்றியதிலிருந்தே நீர் அவசியமாயிருந்திருக்கு...
அதை வள்ளுவர் சொன்னார்... அதை நானிப்போ வழி மொழியறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க கருன்...
தங்களின் ரசனைக்கு எனது நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
டும்டும்...டும்டும்...
சிறப்பான பதிவு...
நீரின்றி அமையாது உலகு
நீர்
நீரை பற்றி
நீராடி விட்டீர்...
கவிதை அருமை.
அழகான பாராட்டறிவித்தலுக்கு எனது நன்றிகள் தோழரே...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க குமார்...
வருகைக்கு நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
சேமிக்கச் சொல்லி
நீங்கள்
சேமித்து உதிர்தவைகள்
தடையேதுமின்றி ஓடுகிறது
எங்கள் எண்ணங்களிலும்...
நன்றி நண்பரே!
kavithy arumy
வாங்க கலா...
உங்கள் மனதில் ஓடியவற்றை எனக்காக சேமித்ததிற்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
கவிதையினை ரசித்தமைக்கு நன்றி விஜி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
thanneerin
mukkiyathuvathai
kavidaiyai
vaditha
mogananukku
nanri....
வாசித்தமைக்கும், கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment