ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, December 13, 2011

எவையெல்லாம் கவிதை..?


எவையெல்லாம் கவிதை
என சொல்வாய்..?
என்று என்னிடம் வினவுகிறாய்...
நீ உதடு பிரித்து படிப்பது
கூட கவிதைதானடி என்றேன்...
அழகாய் சிரித்து...
அழகாய் இருக்கிறது
உங்களது பொய் என்கிறாய்...
உன் சிரிப்புக்கு முன்பு
அவையெல்லாம் சாதரணமே
உன் சிரிப்பை காணா விடில்
என் மனம் சதா ரணமே...
என்றேன்
போய்யா போ..
என்று பொய்க்கோபம்
காட்டியே எனை மயக்குகிறாயடி..!
இந்த மயக்கத்தில்
என் சிந்தனைச் சிறகு
சிறகு விரிக்காமல் எப்படி இருக்கும்?
8 comments:

சிநேகிதி said...

வரிகள் அழகு

மோகனன் said...

வாங்க சிநேகிதியே...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கரவைக்குரல் said...

கவி வரிகளும் அதனூடான உணர்வு வெளிப்பாடும் சிறப்பு வாழ்த்துக்கள்

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பா! சீக்கிரம் மாப்ளே ஆகுங்க.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

மோகனன் said...

தங்களின் வருகைக்கு நன்றி தனபாலரே...


மாப்ளே ஆகுங்க என்றால் புரியவில்லையே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

vivekrocz said...

கவிதை அருமை தோழா

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!