ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 21, 2012

குழந்தையின் தூக்கம்!



தேக்குமரத் தொட்டிலிலே
சந்தனத் தைலமிட்டு
பனிக்குளிர் காற்றை பரவவிட்டு
பணக்கார வீட்டுப் குழந்தையை
பதமாக தொட்டிலாட்டினாலும்
தூங்குவதற்கு நேரம் பிடிக்கிறது
இந்த பாழும் நகரத்திலே…

வேப்பமர நிழலினிலே
ஒரு சேலை முடிச்சிற்குள்
தூளி கட்டி போட்ட
பாட்டாளியின் குழந்தை...
தன் தாயின் வாசத்தை
சேலையில் சுவாசித்தபடி
சுகமாய் தூங்கிப்போகிறது
நான் வாழும் கிராமத்திலே…!

++++++++++++++++++++++++++++++++++++++

அன்பான நட்பு வட்டங்களுக்கு...

கவிதை எழுதி நெடுநாட்களாகி விட்டது. நேரமின்மையும் வேலைப்பளுவும் இதற்கு காரணம். தற்போது அச்சூழல்கள் எனை விட்டு சற்று விலகி இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. மீண்டும் அதே உத்வேகத்துடன் உங்களை இனி சந்திக்கிறேன் என் கவிதைகளோடு... மீண்டும் உங்களின் விமர்சனக் கணைகளால் எனை அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

என்றென்றும் அன்புடன்
உங்கள்
மோகனன்




6 comments:

சசிகலா said...

வேப்ப மர காற்றின் அசைவில் உறங்கும் குழந்தையே அதிஷ்டசாலி.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் அழகான வரிகள்...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

மோகனன் said...

தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி சசிகலா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வணக்கம் தனபாலரே...

தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

தூக்கம் சொகுசை நோக்கியது அல்ல.விழிப்பை நோக்கியே என்பதை நம்மவர்கள் உணர்வார்களா?

மோகனன் said...

அட... இந்த சிந்தனை புதியதாக இருக்கிறதே...

அதுவும் உங்களைப் போல...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!