ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, March 4, 2013

பாலியல் வன்முறையை?



தில்லி பாலியல்
சம்பவத்திற்கு பிறகுதான்
மக்களிடையே
மாநில அரசுகளிடையே
எத்தனை விழிப்புணர்வுகள்...
குற்றவாளிகளுக்கு
எத்தனை காவடி தூக்கல்கள்...
பெண்களின் மேல்தான்
எத்தனை வன்மொழிச் சாடல்கள்...
தினமும் அரங்கேறும்
வன்புணர்வுக் கொடூரங்கள்...

தலைநகரில்
தலைவிரித்தாடும்
வன்புணர் கொடூரங்கள்
பாரதத்தாயின்
மாண்பெனும் மார்பினை
அறுத்தெறிகின்றன....
தாய்மையைப் போற்றும் நாட்டில்
பெண்களின் பாதுகாப்பு
தலைதெறிக்கின்றன

கொள்ளையை மன்னிக்கலாம்
படுபாதகக் கொலையை?
வன்முறையை மன்னிக்கலாம்
பாலியல் வன்முறையை?
திருடர்களை மன்னிக்கலாம்
வன்புணர் கொடூரர்களை?
இவைகளையெல்லாம்
மன்னிக்கலாகுமா?
கொன்றொழிக்காமல் விட்டால்
அது தகுமா..?

காதலிக்க மறுத்தால்
ஆசிட் வீசு
காமத்திற்கிணைய மறுத்தால்
கொன்று வீசு
சிறுமியென்றும் பாராதே
பாட்டியென்றும் பாராதே
தேவையெனில் வன்புணர்வில்
எடுத்துக் கொள்...
எடுத்துக் கொண்ட பின் 'கொல்'
எனத் திரியும்
ஈனப்பிறவிகளுக்கு
இந்நாட்டில் இடம் கொடுக்கலாமா?
இல்லை மூன்று வேளை
உணவளித்து
சிறையிலிடலாமா?

மனித உரிமை அமைப்புகள்
இதற்கெல்லாம்
மவுனம் சாதிப்பதேன்..?
இவ்வுலகிலிருந்தே அழிக்கப்படவேண்டிய
ஈனப்பிறவிகளுக்கு
குரல் கொடுப்பதேன்...
அவர்'களை' எல்லாம்
களை எடுக்க வேண்டாமா?
மனிதாபிமானமற்ற
ஈனப்பன்றிகள் மீது
ஈட்டியைப் பாய்ச்ச வேண்டாமா?

நமைப் பெற்றவள் ஒரு பெண்
நமை பேணிக் காப்பவள் ஒரு பெண்
நம்மோடு துணையாய்
கடைசி வரை வருபவள் ஒரு பெண்
என பேதம் தெரியாத
நாய்களுக்கு எதற்கு சட்டப் பாதுகாப்பு
பெண்களைப் பாதுகாக்காமல்
பேடிகளைப் பாதுகாக்க
எதற்கு காவல் அமைப்பு...

குற்றம் நீருபிக்கப்பட்டால்
அவன் நாடாள்பவனே ஆயினும்
அப்பேடியை உடனே தூக்கு
மக்கள் மத்தியில் மாட்டிடு 'தூக்கு'
ஆசிட் வீசினால்
அந்நாய்களை ஆசிட் ஆலையில்
தூக்கி வீசு...
கண்ணுக்கு கண் வாங்கு
இல்லையேல் ஆட்சியை விட்டு நீங்கு

பெண்ணியம் வாழ்ந்திட வேண்டுமெனில்
ஆணினம் மாறிட வேண்டும்
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில்
கடும் சட்டங்கள் தோன்றிட வேண்டும்
இவைகள் இன்னும்
நம் புத்தியில் ஏறா விட்டால்
மீண்டும் மீண்டும்
முளைத்திடும்
தில்லியில் பாலியல் பலாத்காரம்...
சூரியநெல்லி விவகாரம்
ஆசிட் வீச்சில் உயிர் போகும்...

(நாளிதழ்களைத் திறந்தால், நாடெங்கும் நிகழும் வன்புணர்ச்சிகள், ஆசிட் வீச்சு கொலைகள், பெண்ணியத்திற்கெதிரான கொடுமைகள் ... என என் மனதை அரித்துக் கொண்டே இருந்தன. இதனை வாசகர் ரமேஷ் அவர்களும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே இருந்தார்...

இக்கவிதை பலகொடூரங்களால் காற்றில் கரைந்து போன பெண்ணிய தீபங்களுக்கு சமர்ப்பணம்)




21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை...

இந்த நிலை உடனே மாற வேண்டிய ஒன்று...

மோகனன் said...

வருகை தந்த தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க தனபாலரே...

இக்கொடிய நிலை மாறவேண்டும்... இல்லையேல் மாற்ற வேண்டும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anonymous said...

கவிதை சிந்திக்க வைத்தது.நன்று .
பாராட்டுக்கள்...

இரா. ரவி

Anonymous said...

Nandri Nanbaaaaaa..


M RAMESH

மோகனன் said...

மிக்க நன்றி ரவி அவர்களே

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நன்றி வேண்டாம் ரமேஷ்...

விழிப்புணர்வு வேண்டும்.. அது ஏற்பட்டால் போதும் எனக்கு...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anonymous said...

கச்சித நிமிடங்கள்
உச்சிதனை திறந்து
இரு சிட்டிகை சிந்தனை
சிதறவிட்டிருந்தால் நாசம்பரத
வேலைகளில் வெஞ்சினப்பட
இந்த வேட்டுவருக்கு மனம்
வருமோ! கம்போகித சினம்
குறையுமொ! சொப்பி
தளங்களில் சைனைட் குப்பி
கடித்த இளைஞர் எங்கே
இந்த கடுவந்தின் மந்திகள்
எங்கோ ! கெடுகெட்ட நாடே

அன்புடன்
பக்‌ஷிராஜன்

மதுரை சரவணன் said...

இவையெல்லாம் கனவுகளாகிப் போகும். பெண்கள் சுதந்திரம் எப்போது கிடைக்குமோ...! பாலியல் கொடுமையிலிருந்து எப்போது விடுதலைப் பெறுவார்கள்..!

மோகனன் said...

வாரும் ராஜரே...

தங்களின் கருத்தும் பல மாக்களை மக்களாக்கட்டும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

மாறவேண்டும் சரவணன்...

இல்லையெனில் நாம் அதை மாற்ற வேண்டும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

ஆதியில் தொடங்கிய ஆணாதிக்கம் வேரறுந்தால் மட்டுமே இங்கே பெண்ணியம் பாதுகாக்கப்படும்.அதுவரை சட்டங்கள் எல்லாம் வெறும் கண் துடைப்புதான் ..!

மோகனன் said...

மாற்றுவோம்... ஆணினம் என்று சமத்துவத்தின் உணைமையைப் புரிந்து கொள்கிறது.. அன்றுதான் இந்நிலைமை மாறும்...

அதை அரசு முன்னெடுத்துச் செல்லவேண்டும் தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

A.selvamani said...

vanakkam nanbare...


thangalin kavithai nandraga irukirathu...

unarvu poorvamana varikal arumai....

analum oru chinna mana kastam enaku...
ungal meethalla. sila pengal meethu.

parampariyam, kalacharam pondra vatraiku peyar pona namathu
bharatha nattil sila pengal AADAI kattupadu illamal pothu idangalil
sutri thiriyum
nilaithan naam nattu pengaluku erpadum nilamaiku karanam ena naan ninaikiren.

AADAI kattupad illamal irupathu pengalin sudhanthiram endru solgirargal
anal avargaluku varum abathugaluku karanam AADAI kattupadu illamaithan endru
yaar avargaluku solvathu.....

Naan ethenum thavaraga solliyirunthal mannikavum.

Thanks & regards
A.Selva

மோகனன் said...

அன்பருக்கு...

தங்களின் கருத்தில் தவறு ஏதும் இல்லை.

இருப்பினும் ஆண்கள் இதுபோன்று மேலாடை இல்லாமல் அணிந்து கொண்டு தெருவில் போனால் பெண்கள் யாரேனும் வந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்களா என்ன?

அயல்நாடுகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லையே...

ஆடை சுதந்திரம் இருபாலருக்கும் பொதுதானே...

சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இருக்க வேண்டும் என்கிறேன் நான்...

இதற்கு தங்களின் பதில் என்ன நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

A.selvamani said...



nanbare,


naan kuripittathu sila pengalai mattume...
anaithu pengalaiyum alla..

athey pola suya kattupadu, suya olukkam konda angal ingeythan

athigam irukirargal.

ayal naadugalil AADAI kattupadu illaithan avargathu kalacharam veru
nammudaiyathu veru... angey oru ano allathu penno ethanai perudanum thirumanam
seiyalam, kadhalikkalam, intha panbadu namathu naattil undaa? illai
appadithan seiya mudyuma?

namathu panbadu kalacharathai peni kappathil pengalukkum perum pangu
undu nanbare.

paliyal unarvugalai thoondi anglai mayakkum pengalum inge
irukirargal enbathu unmaithane...

angaluku enna analum ketka inge sattam illai
athanal than naam pengalai indru varai theivamagave parkindrom.

AADAI suthandhiram enbathu ennavendru enaku puriya villai.
oru aanai palunavirku thoondum vagaiyil AADAI anivathu than
AADAI sudhanthirama nanbare?

Thanks & regards
A.Selva

மோகனன் said...

தங்களின் வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே...

1000-ல் 2 பெண்கள் நீங்கள் சொல்லும் பிரிவில் வருவார்கள்...

ஆண்களில் அப்படி இல்லையே... சிறுமிகள் எங்கு அசிங்கமாக ஆடை அணிந்திருக்கிறார்கள். பள்ளி செல்லும் மாணவிகள் எங்கே அசிங்கமாக ஆடை அணிந்திருக்கிறார்கள்...

ஆணின் பார்வை ஏன் பாலுணர்வுக்கு திரும்பிக் கொண்டே இருக்கிறது. தேவையெனில் இதற்கென தனி இடங்கள் இருக்கின்றனவே அங்கே போகவேண்டியதுதான... ஒன்றுமறியா சிறுமிகளும், மாணவிகளும் ஏன் பலியாக வேண்டும்...

பாலுணர்வு பெண்களுக்கு ஏற்படாதா.. அவள் இங்கே அப்படித்தான் நடந்து கொள்கிறார்களா?

ஆணுக்கு ஒரு நீதி.. பெண்ணுக்கொரு நீதியா நண்பரே..?

A.selvamani said...



illai nanbare...

naan sirumigalaiyum, palli manavigalayum,

AADAI kattupadu illamal irukirargal endru kooravillai..

sirumigal meethum, palli manavigam meethum,
appavi pengal meethum paliyal vanmuraiyil eedupadubavargal nichayamaga
thandikka pada vendiyavargal than athil maatru karuthu illai...

sirumigalai apadi seiyum angalin mana nilaiyai parkka vendum
avan manithanaga irunthal appadi seiya mattan.
appadi seibavargal manithargale illai, veraruka vendiya mirugangal.

palunurvu pengaluku erpadatha endru ketkirirgal
apadi erpattalum oru 5 vayathu siruvanai avalal palunurvirku atpadutha
mudiyathu.

analum ningal udagangalil padithirupirgal

asiriyai manavanodu kalla thodarbu....

40 vayathu pen 15 vayathu siruvanudan odi ponathu...

ithellam namaku verum seithi thana? nanbare....

மோகனன் said...

இங்கு பெண்களின் குற்ற எண்ணிக்கை மிகவும் குறைவு நண்பரே...

ஆணினம் அத்து மீறுகிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்...

ஆணினத்திற்கும் ஒழுக்கம் பொது... ஒரு பெண்ணோ ஆணோ விரும்பி செல்கிறார்கள் என்றால் அது அவர்கள் சுதந்திரம்... பாலியல் வன்முறை என்பது அடுத்தவர் சுதந்திரத்தை அல்லவா கொன்றழிக்கிறது...

ஆணினம் திருந்தினால் அனைத்தும் திருந்தி விடும் என்கிறேன் நான்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

A.selvamani said...


maalai vanakkam nanbare....

aaninam athu mirugirathu enbathu unmaithan....

aanalum ithaiyellam thandi madhu manithanuku

pirathana ondraga marivittathu...

madhu mayakkathil manithan thannai marakiran
mayakkathil thavarugal seigiran...

thavaruku inangubavargalai anaikiran
illavittal azhikiran...

enna seivathu nanbare.....

மோகனன் said...

மகிழ்ச்சி நண்பரே...

இந்தியாவில் மதுவை பெண்ணினம் விரும்புவதும் இல்லை... உருவாக்குவதும் இல்லை... சிலர் விதிவிலக்காக இருக்கலாம்...

ஆனால் ஆணினத்தின் தவறுகளுக்கு மது காராணம் என்பதை மாண்புடன் ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்...

மதுவை தயாரிப்பதும், விற்பதும், நுகர்வதும் ஆணினம்தான்... பெண்ணினம் அல்ல..

பெண்ணை நாம் கண்ணாய் பாதுகாக்க வேண்டும். அவள் நமக்கு இணையானவள். மனித இனத்தில் சரிசம பங்கும், பாத்தியமும் கொண்டவள்...

விருப்பமில்லையெனில் கட்டிய மனைவியைக் கூட தீண்டாதவனே ஆண்மகன்... மற்றவர்கள்.......?

நீங்களே பதிலெழுதிக் கொள்ளுங்கள்...

விவாதம் முற்று பெற்று விட்டதென்று நினைக்கிறேன்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்