ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 12, 2010

நட்பிற்கு திருமணம் - புரட்சித் திருமண வாழ்த்துக் கவி..!

என் அன்பில் நிறைந்த நண்பன் ராஜேந்திர பிரசாத்திற்கு இன்று திருமணம்... என்னுடைய பட்டமேற்படிப்பு படிக்கும் காலத்தில், நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும் அளித்த எனது அன்பு நண்பனுக்கு நவம்பர் 12, 2010 அன்று திருமணம்...

'உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' - குறள்

என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக இருந்தவன் இந்த ராஜேந்திர பிரசாத்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த புரட்சித் திருமண வாழ்த்துக் கவி இதோ...

இந்த படத்தை சொடுக்கினால் படம் பெரிதாய் விரியும்... வாழ்த்துக் கவியும் படிக்கக் கிடைக்கும்... கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..? சரியாய் படிக்கத் தெரியவில்லை எனில்... கவியை கீழே கொடுத்திருக்கிறேன் படியுங்கள்...
 

பி
றக்கும் போது நீயறியாய் இவள் உன்னவள் என்று..?
 அவளுமறியாள் நீ அவளுடையவன்தான் என்று...?
விவர்மன் ஓவியத்தை சந்திப்பது போல்  இருவரும்
 பல்கலையில் சந்தித்தீர்! சிலாகித்தீர்! சித்தம் ஒன்றானீர்!
சாதி, மதம் பாராமல் இருமனத்தின் சம்மதத்தை தேடினீர்..!
 இசைந்தது மனது; இனிதே திருமணமும் முடிவானது..!
த்தரணியில் இப்படியொரு புரட்சி மணம் பாரீரென
  புவி முழக்கம் செய்த என் அன்புத் தோழமைகளே..!

சோலையில் இணை பிரியாமல் வாழ்ந்திடும் அன்றில்
 பறவைகள் போல் இல்வாழ்வில் வாழ்ந்திட வேண்டும்..!
பிறப்பெனில் இன்பமுண்டு, துன்பமுண்டு என்றுணர்ந்து
 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்திட வேண்டும்..!
யார் பார்த்தாலும் உங்களைப் போலொரு உத்தமத்
 தம்பதிகளில்லை என ஊர், உலகம் போற்றிட வேண்டும்..!

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!


மணமக்கள்: தி. ராஜேந்திர பிரசாத், சோபியா
இணைந்த நாள் : 12.11.2010
இணைந்த இடம்: திருமயிலை காபாலீஸ்வரர் கோயில்


வாழ்த்தும் அன்பு நண்பர்கள்


அ. பிரேம் சந்திரன்
மோ. கணேசன்
வ. நவநீத கிருஷ்ணன்
நீ. விஜயகுமார்
ச. சுரேஷ் குமார்

(இது போல என் வேறு சில நண்பர்களுக்கு நான் எழுதிய கவிதைகளை வாசிக்க வேண்டுமா..? கீழே உள்ள இணைப்புகளை உயிர்ப்பிக்கவும்...)




10 comments:

Prem S said...

Different thinking,superb continue brother

மோகனன் said...

@S.PREM KUMAR

வருகைக்கும், வாசித்தமைக்கும் மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Maheshwari said...

dear friend, my name is maheshwari,
how are you????????

unga kavithai nalla iruku
senthilkumar vs maheshwari intha name la kavithai eluthi tharengala????????
please!!!!!!!!!!!!

மோகனன் said...

வணக்கம் தோழி...

நலம், நலமே விழைய ஆவல்...

உங்கள் இருவருடைய short name தமிழில் குறிப்பிட்டு அனுப்பவும்..

முயற்சி செய்து பார்க்கிறேன்...

வருகைக்கும், வாசிப்பிற்கும், கருத்துரைக்கும் எனது கனிவான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

'பரிவை' சே.குமார் said...

நண்பா... நண்பருக்கு வாழ்த்துக்கள்.

தினமணியில் 2007 இதழில் நீ எழுதிய குழந்தைககள் கவிதையை எனது தோழி சிநேகிதி அவர்கள் தனது வலைப்பூவில் இன்று பகிர்ந்துள்ளார்கள். அதற்கான முகவரி இணைத்துள்ளேன். பார்க்கவும். நன்றி.

http://en-iniyaillam.blogspot.com/2010/11/blog-post_14.html

மோகனன் said...

அன்பு நண்பா...

உன்னுடைய வருகைக்கும்... வாழ்த்திற்கும்...
தகவலிற்கும் இனிய நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Rajendra prasad T said...

அன்புள்ள மோகனன்...

உங்களது மேலான ஆதரவுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்

அன்புடன்
பிரசாத்

மோகனன் said...

வாங்க புது மாப்பிள்ளை...

நன்றிகளை விடு மாப்பிள்ளை... மணவாழ்வை இனிதாக யடத்து...

உன் வருக்கைக்கும், வாழ்த்திற்கும் என் நன்றிகள்...

K.PARAMANANDHAM said...

செந்தில் ஆனந்த் - ரஞ்சினி ப்ரீத்தி இவர்களின் திருமணம் சென்னையில் நடை பெற உள்ளது. இந்தப் பெயர்களை இணைத்து ஒரு வாழ்த்துக் கவிதை வரைந்து, இணையான ஆர்ட் வொர்க் ஒன்றும் என் EMAIL ID க்கு அனுப்பினால் மகிழ்வேன்.kparamanandham@yahoo.co.in

மோகனன் said...

வணக்கம் பரமானந்தம்...

தாங்கள் எனது மின்னஞ்சலில் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்...

dearganesan@gmail.com

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!