ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, April 23, 2010

நட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவி..!

என் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ... என்னோடு சேர்ந்து நீங்களும் மனதார வாழ்த்துங்களேன்..!இந்த படத்தை சொடுக்கினால் படம் பெரிதாய் விரியும்... வாழ்த்துக் கவியும் படிக்கக் கிடைக்கும்... கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..? சரியாய் படிக்கத் தெரியவில்லை எனில்... கவியை கீழே கொடுத்திருக்கிறேன் படியுங்கள்...

விடிவெள்ளி உன் வாழ்வில் உதிக்கிறது பார் நண்பா..!
விண்மகளும் உன் துணையாய் சேர்வதன் பால்..!
கத்தினை எதிர்க்கின்ற புது சக்தி கிடைக்கும்..!
நலம்தனை வென்று தரும் புது யுக்தி கிடைக்கும்..!
வருக்குமஞ்சாமால்…  யவற்றுக்குமஞ்சாமால்…
இன்பமாய்த் துவக்கு உன் இல்வாழ்க்கையை..!
குலம் காக்க ஓர் பெண் மகவை ஈன்றெடுத்து…
குதுகலமாய் உன் இல் வாழ்வை நீ நடத்து..!
மாசற்ற நண்பர் குழாம் ஒன்று கூடி – என்றென்றும்
நலம் வாழ வாழ்த்துகிறோம் நீவிர் வாழி..!
ர்ரென்றாலும் இருப்பதற்கில்லை எம் தோழா…
இன்பமுடன் இல்வாழ்வினைத் துவக்கிடுங்கள்..!

சூத்திரங்கள் பல அடங்கியதுதான் இல் வாழ்க்கை..!
உங்களுக்குள் எந்நாளுமன்பு நிலைக்குமென்றால்…
ர்க்காது உம் இல்வாழ்வில் என்றும் தொல்லை..!
விட்டுக் கொடுத்து வாழ்வீர்களெனில் இன்பமே எல்லை..!
யாழிசையும்  குழலிசையும் ஒன்றிணைந்து வாழ்வது போல்
இந்நாளில் இணைகின்ற மணமக்களே வாழ்க பால்லாண்டு..!


மணமக்கள்: நீ. விஜய குமார் , மு. சூர்யா
இணையும் நாள் : 25.04.2010
இணையும் இடம்: குலசேகர பட்டினம்


வாழ்த்தும் அன்பு நண்பர்கள்

அ. பிரேம் சந்திரன்
மோ. கணேசன்
வ. நவநீத கிருஷ்ணன்
ச. சுரேஷ் குமார்

(இது போல என் வேறு சில நணபர்களுக்கு நான் எழுதிய கவிதைகளை வாசிக்க வேண்டுமா..? கீழே உள்ள இணைப்புகளை உயிர்ப்பிக்கவும்...)
6 comments:

கலா said...

மோகனன் மிகமிக அருமையாய்
இருக்கின்றது உங்கள் வாழ்த்துக்
கவிதை நன்றி.
அவர்கள் இருவருக்கும் என்
இதயங்கனிந்த திருமண வாழ்த்துகள்

மோகனன் said...

மிக்க மகிழ்ச்சி தோழி...

அவனது திருமணத்திற்கு நேரே சென்று வாழ்த்தி விட்டு இன்றுதான் வந்து சேர்ந்தேன்...

உங்கள் வாழ்த்தும் அவனிடம் இப்போது போய்ச்சேரும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ganesh said...

hello mohanan sir migavum arumaiyaga ullathu thangalathu blog. thodaratum ungal tamilpani vazthukkal.

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anonymous said...

HAI SENIOR,
It is nice to c u r blog
nice poems...
u r blog made me to cherish madras university's past memories.
wish u all the best....

kiruththiga
jaffna university
jaffna
srilanka

மோகனன் said...

அன்பு கிருத்திகாவிற்கு...


நலம், நலமறிய ஆவல்...

வருகைக்கு மிக்க நன்றி... அடிக்கடி (சு)வாசிக்க வரவும்...