ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 30, 2010

என் இதய சிம்மாசனத்தில்...

நட்சத்திரக் கூட்டத்தின்
நடுவே வட்ட நிலா
கொலு வீற்றிருப்பதைப் போல
என் இதய சிம்மாசனத்தில்
நீதான் அன்பே கொலு வீற்றிருக்கிறாய்..!

நீ கொலு வீற்றிருப்பதை
உன் உள்மனதிடம் மட்டுமல்ல
உன் உறவுக் கூட்டத்திடம்
போய்ச் சொல்...
உனக்கான இளவல் இங்கே
காத்துக் கொண்டிருக்கிறான் என்று..!



7 comments:

வெற்றி நமதே said...

பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

மோகனன் said...

பார்த்துட்டேங்க...

வருகைக்கு நன்றி..!

arasan said...

நல்லா இருக்கு நண்பா..
வாழ்த்துக்கள்..

Unknown said...

நன்றாக இருக்கிறது...
சரி..
உங்கள் கவிதை சமூகம் பேசுமா?

மோகனன் said...

அன்பின் தோழர் அரசனுக்கு...

அக்காலத்தில் கவிஞர்களை அரசன்தான் கவுரவிப்பார்... அது போல் இருக்கிறது.. தங்களது பாராட்டு...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அன்பான (யோவ்) வெறும் பயரே (வெறும் பயலேன்னு சொல்ல முடியலீங்க...)

அப்படி உம்மைக் கூப்பிடவே அச்சமா இருக்கிறதய்யா... உமது உண்மையான பெயரைக் கூறும்...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க பாரத்...

கண்டீப்பாக பேசும்.. ஆர்ம்ப காலத்தில் நானெழுதியது எல்லாமே சமூகம் சார்ந்தவைதான்... இந்த தளத்தில் சமூகம் சார்ந்த கவிதைகளையும் பதிப்பித்திருக்கிறேன்... அதற்கென தனிப்பிரிவு இருக்கிறது... படித்துப் பாருங்கள்...

தங்களின் பார்வைக்கு இனி சமூகம் அடிக்கடி படும்...

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...!