நம்மில் சாதிகளில்லை என்றவன் யார்..?
மூடத்தனங்களை ஒழிக்கச் சொன்னது யார்..?
சாத்திரங்கள் பொய்யென்றவன் யார்..?
பெண்ணியத்தை போற்றச் சொன்னது யார்..?
நம் தமிழினத்தை தட்டியெழுப்பியது யார்..?
வீரிய எழுத்தால் வீரத்தை ஊட்டியது யார்..?
பாமரனையும் பாய்ந்தெழச் செய்தது யார்..?
வெள்ளையனை விரட்ட கவியாயுதமேந்தியது யார்..?
யார்..? யார்..? அவன்தான் மகாகவி பாரதியார்?
தன் பாட்டுத் திறத்தாலே ‘எங்களை அடிமையாக்க
வெள்ளையனே நீ யாரெ’ன்று வினவியவன்..!
விடுதலைக்காக பேனாவையே ஆயுதமாக்கியவன்..!
பாரதி யார்? என்று பரங்கியனை கேட்க செய்தவனே...
மங்கிப் போயிருந்தபோது மதியென முளைத்தவனே...
பலமிழந்து கிடந்த போது பரிதி போல் முளைத்தவனே...
துவண்டு கிடந்த போது தோள் கொடுத்தவனே...
எங்களின் சுந்தரத் தமிழனே... தேன் தமிழ்க் கவிஞனே...
என் போன்ற ஏழைகளுக்கு ஏந்தலாய் இருந்தவனே...
நீ பிறந்த இந்நாளினை தேசியக் கவி நாளாக
கொண்டாடுகிறேன்... பண்பாடுகிறேன்.. வாழ்க நீ எம்மான்..!
(இன்று தேசியக் கவி பாரதியாரின் 129 வது பிறந்த நாள் விழா... அந்த மாபெரும் கவிஞனுக்கு... இந்த சிறுவன் கிறுக்கிய பிறந்த நாள் கவிதை...)
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் வித்து
இனிய தமிழ்க் கவிதைகளின் தனிப்பெரும் சொத்து
இந்திய விடுதலை வேள்வியை மூட்டிய முத்து
ஆதலால் அவன் மேல் கொண்டேன் பித்து..!
- மோகனன்
- மோகனன்
பாரதி குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..! (பிறந்த நாள் கவிதை)
அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..! (பிறந்த நாள் கவிதை)
மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி (நினைவு நாள் மரபுக்கவிதை)
4 comments:
//ஆதலால் அவன் மேல் கொண்டேன் பித்து..! //
நீங்கள் மட்டுமா? தமிழை, தாய்
நாட்டை,பெண்விடுதலையை நேசிக்கின்ற அனைவரும்தான்.
இந்நன்னாளில்,அம்மகா கவிஞனுக்கு அஞ்சலி!
நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வணக்கம் தோழர் அவர்களே.
பாரதி பற்றி மிக அழகா கவிதை எழுதி உள்ளீர்கள் அதற்கு என் பாராட்டுக்கள்.
ஒரு சிறிய தவறு 123.. அல்ல 129 பிறந்தநாள் .
நன்றி !
ஆம் தோழரே...
அவசரத்தில் செய்து விட்ட பிழை.... அலிவலகம் முடித்து வீட்டிற்கு சென்ற போதுதான் அந்த தவறை உணர்ந்தேன்...
அதை மறுநாளே திருத்தி விட்டேன்... சுட்டியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி சுவாசிக்க வாங்க..!
Post a Comment