ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, September 11, 2009

மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி


ஆசுகவி படைத்தெம் தேசியக் கவியே
வீசுகின் றகாற்றில் கரைந்து போனதேன்
பூசுநறு மணந்தமிழ் கவிபடைத் ததமிழே
மாசுநிறை பூமியில் மறைந்ததேன்

ஆரியனை எரித்தது போல் பரங்கியனை
எரித்து நின்றாய்… எழுத்தாணி யெடுத்து
விரித்தெழு தினாய் சுதந் திரத்தை – தமிழ்கவிச்
சூரியனே நின்கவி சூழ்ந்’தேன்’.

உன்னுடைய கவிதை யெல்லாமெனக்கு உரம்
நின்னுடைய வரிகளெல்லாமெனக்கு வரம்
கன்னித் தமிழ்வார்த் தைகள் சரம் – பைந்தமிழ்
மன்னவ நின்கவி ஆலமரம்.

மண்ணை விட் டுமறைந் துவிட்டெம்மை
கண்ணீரில் ஆழ்த்தி விட்டாய் கவிஞனே
விண்ணில் நீ நட்சத் திரமாம் – தீந்தமிழ்ப்
பண்ணில் நீ கவிப் பகலவன்.

துயில்கொண் டெம்மைது யரத்திலாழ்த் திவிட்டாய்
குயில்போலெங் களுக்குக விசமைத் துக் கொடுத்து
நோயிற்குன் னுயிரைக் கொடுத்தாய் – செந்தமிழ்
பாயிரமே நின்னைப் பணிந்’தேன்’.

(மகா கவிக்கு மரபுக் கவிதையால் கவிதாஞ்சலி எழுதியுள்ளேன்... அவருடைய நினைவு நாளில் அவரது மலர்ப்பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறேன்... குறைகளிருப்பின் சுட்டுங்கள்..)2 comments:

சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது.

உங்கள் கவிதையில் குறைகளைச் சுட்டிக்காட்ட நான் ஒரு கவிஞனாகவோ, அல்லது, கவிதையிலக்கணம் தெரிந்தவ்னாகவோ இருக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் அப்படியில்லை.

ஆனால் ஓவியம் பற்றித்தெரியும்.

பாரதி படம் நீங்கள் போட்டதா? இல்லை யார் வரைந்ததாயிருந்தாலென்ன?

ஓவியத்தில் ஒரு குறை. கணகளின் இமைமயிர்கள் சிறிதளவேயிருக்கவேண்டும். பெருமளவில் இருப்பின், அது பெண் கண்களைப்போல் ஆகிவிடும்.

இங்கே, பெருமளவில் இருந்து பாரதிக்கு பெண்முகம் வந்து விட்டது. அதன் விளைவு: பாரதியின் பார்வை, மென்மைத்தன்மையுடன் வந்து விட்டது.

பாரதி தார்மீககோபம் உடையவர் என முகத்தில் தெரியும்படி வரைவது ஓவியர்களின் பழக்கம்.

நன்றி.

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

தங்களுடைய திருத்தல்கள் என்னுடைய கிறுக்கல்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன...

ஓவியமும் அடியவன் வரைந்ததுதான்... கூடிய விரைவில் அதை திருத்தி விடுகிறேன்...

தங்களது பெயர சொல்லுங்களேன்.. அழைத்து மகிழ கேட்கிறேன்...

குறைகளை சுட்டுங்கள்... என் படைப்புகள் சிறப்படைய அது உதவும்..

நண்பருக்கு நன்றிகள் பலப்பல...