ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, February 24, 2011

கொட்டும் மழைக்காலம்..!
அதுவோ கொட்டும்
மழைக்காலம்…
அலுவலகம் செல்ல வேண்டி
அவசர அவசரமாய்க்
குளித்து முடித்து துணியைத்
தேடுகிறேன்…
தலை துவட்டக் கூட
துணியில்லையடா...
அத்துனையும்
நேற்று பெய்த மழையில்
நனைந்து விட்டதடா
எனகிறாய்….

'அலுவலகம் போக வேண்டுமடி
இப்போது என்ன செய்ய..?'
என நான் சத்தமிட…

சாந்தமாய் என்னருகே வந்து
உன் நீள் கூந்தலால்
என் தலை துவட்டி
உடல் துடைத்து விடும் போது
உன் கூந்தல் ஸ்பரிசத்தில்
என்னை நான் மறந்து விட …
உன் கூந்தல் வாசத்தில்
கோபமெல்லாம் கரைந்து விட
நம் காதல் அங்கே
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறது அன்பே..!
8 comments:

S.Sudharshan said...

அருமையாக ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள் ..வாழ்த்துக்கள் ..

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

சே.குமார் said...

அருமை.
அருமை.
அருமை.

மோகனன் said...

நன்றி சுதர்சன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

சாந்தமாய் என்னருகே வந்து
உன் நீள் கூந்தலால்
என் தலை துவட்டி
உடல் துடைத்து விடும் போது
உன் கூந்தல் ஸ்பரிசத்தில்
என்னை நான் மறந்து விட …\\\\\\\\\\\

மோகனன், அலுவலகம்
போனீர்களா? இல்லையா?
ஓஓஓ... கூந்தல் இதற்கெல்லாம்
பயன்படுகிறதா?

மோகனன் said...

வாங்க கலா...

ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலையை... அலுவலகம் கிளம்பிட்டேன்...

என்னவளுக்கு நீள் கூந்தல்... அதை பயன்படுத்திக் கொண்டாள்...

எதைச் செய்தால் ஆணினத்தின் கோபத்தை மாற்றலாம் என்பது உங்களினத்திற்கே கிடைத்த கலை ஆயிற்றே கலா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Sangeetha DTERT said...

காதல் உயிர்த்தெழுகிறதோ இல்லையோ, சொற்கள் சொன்னபேச்சு கேட்கிறது உங்களுக்கு*

வாழ்த்துகள்

மோகனன் said...

அப்படியா சொல்றீங்க சங்கீதா...

வாழ்த்துக்களுக்கு வணக்கம்...