ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, February 28, 2011

எது நிதர்சனம்..?!

ஒரு நாள் என்னிடம்
என்னவள் இதழ் திறந்து...
'பட்டுப் புடவை
வாங்கித் தாயேன்...'
என்றாள்..!
'பட்டுப் போன்ற
மேனி உனக்கிருக்க
பட்டதெற்குப் பெண்ணே'
என்றேன்..!
சட்டென்று
அவள் முகத்தை
வெட்டிக் காட்டி
உன்னிடம் துட்டில்லை
என்பதை மறைக்க
என்னை பட்டென்று
பிட்டொன்றைப் போடுகிறாயா..?
என்று படி வார்த்தையால்
எனை சுட்டுவிட்டுப் போய்விட்டாள்...

காதலிக்கும் போது
என்னுடைய கவித்துவமான
வார்த்தைகள் எல்லாம்
என்னவளுக்கு இனித்தன...
கல்யாணத்திற்குப் பிறகு..?

(எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப் பட்ட கவிதை... சிலருக்கு இது உண்மை சம்பவமாகவும் இருக்கலாம்..!)
8 comments:

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
தமிழ்குறிஞ்சி

மோகனன் said...

நன்றி.. நன்றி... நன்றி..!

தமிழ் குறிஞ்சிக்கு எனது நன்றி..!

Jothi said...

super,

ithu ungal valkayil unmaya? illaya? Mohanan sir..?

Jothi

மோகனன் said...

வாங்க ஜோதி...

இதற்கு நான் எச்சரிக்கை என்று கவிதையிலேயே பதில் கொடுத்து விட்டேன்...

கருத்திற்கு கனிவான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Thambu Sukuna said...

nanpare Super kavithi...

valththukkal..!

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Suresh K said...

sariyana kavithai ungalin kavithai thaodara en valthugal.

entrum anbudan

sureshkumar
mumbai

மோகனன் said...

வருகைக்கும், வாசித்து ரசித்தமைக்கும், பாராட்டியமைக்கும் மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க.