ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 2, 2011

அதிகாலைப் பனியில்..!


அதிகாலைப் பனியில்
அழகாய்க் குளித்த
ரோஜா மலர் போல
என் முன்னே நீ வந்தாய்...
அந்தியில் வரும் மயக்கம்
எனக்கு அதி காலையில் வந்து விட...
அலுவலக பரபரப்பு
எனை அடித்துத் தள்ள...
உன்னழகை என் கண்ணில்
நிறைத்த படி...
உனைப் பிரிய மனமில்லாமல்
அரை குறை மனதோடு
கிளம்பிச் செல்கிறேன்
அலுவலகத்திற்கு...




8 comments:

'பரிவை' சே.குமார் said...

Nadakkattum... Nadakkattum...

மோகனன் said...

வாங்க குமார்...

சிலாகிப்பிற்கு நன்றி... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

உன்னழகை என் கண்ணில்
நிறைத்த படி...\\\\\\
பாதையில் எப்படி நடந்தீர்கள்?
கண்தெரியாமல் ரொம்பவும்
அவதிக்குள்ளாகிருப்பீஈகளே!
தட்டுத்தடுமாறி அலுவலகம் சேந்தீர்களா?

மோகனன் said...

வாங்க கலா...

அலுவலகம் பத்திரமாக வந்துவிட்டேன்.. வந்த பிறகே இந்த கவிதையை சமைத்தேன்...

என்னை கிண்டல் பண்ணலன்னா தூங்க மாட்டீங்க போலருக்கு...

விடுவேனா நான்... அசரவே மாட்டேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

விடுவேனா நான்... அசரவே மாட்டேன்...\\\\\

ஆமா.... கண்அசரவேமாட்டீர்கள் போலும்.....
அந்தப் பனிமலரின் வாசம் நுகரும்வரை.............

மோகனன் said...

ம்ம்ம்... நான் அசர மாட்டேன் என்று சொன்னது... நீங்க எவ்வளவுதான் கிண்டல் செஞ்சாலும் அசர மாட்டேன்னு சொன்னேன்...

இதிலிருந்து கலா ஒரு கள்ளி என தெரிந்து கொண்டேன்...

Unknown said...

yar antha panimalar?

மோகனன் said...

என்னுடைய கவிதைதான் அந்த பனிமலர்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!