ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, March 4, 2011

உன் நினைவின் தாலாட்டுகளோ..?



ஒரு தாயின் தாலாட்டோ
குழந்தையைத் தூங்க வைக்கும்..!
இசையின் தாலாட்டோ
தனிமையைத் தூங்க வைக்கும்..!
உன் நினைவின் தாலாட்டுகளோ
என் தூக்கத்தை கெடுப்பது
மட்டுமின்றி
நொடிப்பொழுதும்
உன்னையே நினைக்க வைக்குதடி..!




8 comments:

RAJA RAJA RAJAN said...

நல்லாயிருக்கு...

மதுரை சரவணன் said...

kavithai arumai... vaalththukkal

மோகனன் said...

நன்றி திரு. ராஜ ராஜன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க சரவணன்...

வருகைக்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

maranthu vitaya meendum
ninaippatharku?

மோகனன் said...

மறக்கக் கூடியவளா அவள்... என் மரணம் வரை நிலைத்திருப்பவள்...

வருகைக்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

சரிபார்கலாமா?நண்பரே!

எனக்கு இது எதுவோ முழுமைபெறாமல்,புரியமுடியாமல் இருப்பதாகத் தோன்றுகிறது
சரியா!எனத் தெரியாது இருந்தாலும் முயற்சிக்கிறேன்

//ஒரு தாயின் தாலாட்டோ
குழந்தையைத் தூங்க வைக்கும்..!
இசையின் தாலாட்டோ
என் தூக்கத்தைக் கெடுக்கவில்லை
ஆனால்......

தனிமையாய்த் தூங்க வைக்கும்..!
உன் நினைவின் தாலாட்டுகளே!
என் தூக்கத்தை கெடுப்பது
மட்டுமின்றி
நொடிப்பொழுதும்
உன்னையே நினைக்க வைக்குதடி..!//

பாடறியேன்,படிப்பறியேன்,பள்ளிக்கூடம் தான்றியேன் இருந்தாலும் ரொம்பத் தொந்தரவு பண்ணிறலில்ல...
மன்னிக்க வேண்டுகிறேன்..!

மோகனன் said...

அன்புக் கலா அவர்களுக்கு... நலம், நலமே விழைய ஆவல்...


//ரொம்பத் தொந்தரவு பண்ணிறலில்ல......
மன்னிக்க வேண்டுகிறேன்...//

தங்களிடமிருந்து ஏன் இவ்வளவு பெரிய வார்த்தைகள்.. மனதிற்கு வருத்தமாயிருக்கிறது....


நீங்கள் சொல்வதன் அர்த்தப்படிதான் அந்த வரியை அமைத்திருக்கிறேன்...

இசை - தனிமையைத்தான் தூங்க வைக்கும் என்று சொல்லியிருக்கிறேன்... என்னை தூங்க வைக்கும் என்று சொல்லவில்லை... இது மறைமுகமாக உணர்த்தப்பட்டு விடும்...


நீட்சி காரணமாக சுருக்கி விட்டேன்... சுருக்கமாய் எழுதுவதுதானே கவிதை...

நம் இருவரின் சிந்தனையும் ஒன்றாய்த்தானே இருக்கிறது...

ஒரு படைப்பு விமர்சனத்துக்குள்ளாக்கப் படவேண்டும்.. அப்போதுதான் அதனுடைய உண்மையான முகம் வெளிப்படும்... பிறகெதற்கு பெரிய வார்த்தைகள்..?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!