ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 23, 2011

வீரத்தைக் கற்றுக் கொடுத்த..! - தியாகிகள் தின சிறப்புக் கவிதை!

துப்பாக்கிகளைக் கண்டஞ்சாமல்
தூயவளாம் பாரத மாதாவின்
விடுதலைக்காக
துணிவைத் துணையாக்கி
தூக்குக் கயிற்றை
துணிச்சலோடு முத்தமிட்ட
மூன்று மறவர்களின்  தினமின்று..!
முன்னூறு ஆண்டுகளாய்
இருண்டிருந்த இத்தேசம்
மூன்று மாவீரர்களின்
வீரமரணத்திற்குப் பிறகு
வெகு வேகமாய்
விழித்தெழத் தொடங்கியது..!
இந்தியாவின் மூலை முடுக்கெங்கும்
இந்தியர்களின் மூளை முடுக்கெங்கும்
வேண்டும் சுதந்திரம்
என்ற வேட்கை கொழுந்து
விட்டு எரிந்தது...
வந்தே மாதரமென்பது
அனைவரின் தாரக மந்திரமானது..!
வீரத்தை தம் சந்ததிகளுக்கு மட்டும்
கற்றுக் கொடுத்தவர்களிடையே
அன்று சரித்திரத்திற்கே வீரத்தைக்
கற்றுக் கொடுத்த
இம்மாவீரர்களின் தியாகத் தினத்தில்
வீர வணக்கம் செய்கிறேன்..!
அவர்களின் உயிர்த்தியாகத்தை
நினைத்து உருகுகிறேன்..!
நீங்கள் வாழ்ந்த தேசத்தில்
நானும் வாழ்கிறேன்..!
சுதந்திரமாய் நானும் வாழ
வழிசெய்த மாவீரர்களே
உங்கள் திருத்தாழடி சரணம்..!
என்றும் என் நாவினில்
வந்தேமாதரம் ஜனனம்..!

(இன்று தியாகிகள் தினமாகும். மார்ச் 23, 1931 அன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோருடன் சேர்த்து தூக்கிலிடப்பட்ட தினம். அதன் நினைவாகவே இந்த தினம் கடைபிடிக்கப் படுகிறது.)




8 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

உணர்வுரீதியான வரிகள் அருமை

விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கே சமர்ப்பணம் கவிதை
வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

உணர்வுரீதியான வரிகள்.

மோகனன் said...

அன்பான ஹாசிம்..

தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க குமார்...

வாசித்தமைக்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

ungal nattu patrukku thalai vanagugiren

A. Selvamani said...

vanthe matharam..!

மோகனன் said...

வாங்க விஜி...

எல்லோரும் நம் நாட்டிற்காக தலைவணங்குவோம்.. அவர்களின் தியாகத்தை போற்றிப் பாதுகாப்போம்..!

மோகனன் said...

வாங்க செல்வமணி...

வாழ்க பாரதம், வந்தே மாதரம்...