ஏன் மனிதா... ஏன்..?
அன்பிலார்ந்த வாழ்க்கையில்
ஆணவத்திற்கு இடமேன்
ஆதிக்க மனப்பான்மை ஏன்..?
இன்பத்தை பங்கு வைக்குமிடத்தில்
ஈகோவிற்கு இடமேன்
இழிவான பேச்சுக்கள் ஏன்..?
உன் பேச்சை மட்டுமே
எல்லோரும் கேட்க நினைக்கும் நீ
மற்றவர் பேச்சை
கேட்க மறுப்பது ஏன்?
மற்றவர்க்குப் பிடித்ததை அவர்கள்
செய்ய நினைத்தால்
எதையும் செய்யாதே
என அடக்கி வைப்பது ஏன்..?
அவர்களை அடக்கிட நினைப்பது ஏன்..?
உன்னைப் போல மற்றவர்க்கும்
மனதுண்டு, வாக்குண்டு
என்பதை அறியாமல் போவதற்கு
அறியாத பிள்ளையா நீ..?
அகங்காரத்தை கைவிடு...
அன்பினைக் கையிலெடு...
அப்போதுதான் உணர்வுகள் சிலிர்க்கும்...
உன் உறவுகள் உன் கைபிடிக்கும்..!
8 comments:
ஏய் மனிதா?
உனக்கு கவி பாடும் திறன் உண்டு
எமக்கு அதில் நம்பிக்கை உண்டு
கொஞ்சம் நிதானித்து கவி பாடு...
உன் பின்னால் கவி திரண்டு வரும்.
வாங்க நண்பரே...
இதிலென்ன குறை கண்டீர்...
சரியாகச் சுட்டினால் திருத்திக் கொள்வேன் அல்லவா...
வருகைக்கு நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!
unnarvugal silirkkum unnudya uravugal vazhga. anbana kavithy.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே இக்கவிதையை எழுதியிருக்கிறேன்..
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Nalla iruku.
Ungalukul irukum Unarvu pol therigirathu
yarayo sutti kaduvathu polavum therikirathu, nanba yar antha manithan....?
ம்ம்... பெண்ணினத்தின் மீது ஆணினத்தின் அதிகாரப் போக்கை சுட்டுவதாகவும், ஆண்கள் மீது அதிகாரம் காட்டும் பெண்ணினத்தை சுட்டவதாகவும் இக்கவிதையை சமைத்தேன்...
இதில் தாங்கள் எந்த இடத்தில் வருகிறீர்கள்..?
விளக்கம் போதுமா தோழி..!
வருகைக்கு நன்றி... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
ஏன் மனிதா......?\\\\\
இதில்{இச்சொல்லில்} நீங்களும் அடக்கம்!
ஒரு விரல் சுட்டவது மற்றவர்களை.
மூன்று விரல்கள் சுட்டுவது தன்னை.
ஆக......
உங்க கவிதை: பைங்கிளிமேல் பாசம்.
சிலர் சிறகொடித்து கூட்டுக்குப் பூட்டுப்போட்டு
பாட்டுப் படியென்பார்கள்!
நீங்கள் பரவாயில்லை,ஏன்? மனிதாவிலிருந்து......
மனிதனாகிவிட்டீர்கள்!! நன்றி
மனிதனில் நானும் அடக்கமே கலா...
இக்கவிதை முற்றிலும் தம்பதிகளாய் இருப்பவரிகளிடையே... மனைவியை அடக்கும் கணவனையும், கணவனை அடக்கி ஆளும் மனைவியையும் குறிப்பதாக இக்கவிதையை புனைந்திருக்கிறேன்...
மனமொத்து வாழும் தம்பதிகளுக்கு இது பொருந்தாது...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment