ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, July 4, 2011

தூரத்தில் தேவதையாய்..!

நள்ளிரவுப் பெண்ணோ
நைச்சியமாய்
ஒளிந்து கொள்ள முயற்சிக்க...
அதிகாலைச் சூரியனோ
அடித்துப் போட்டது
போல் உறங்கிக் கொண்டிருக்க...
உருண்டை வடிவ உலகமோ
விடியலுக்காக
கண்ணயர்ந்து காத்திருக்க...
கணமணி உன் வரவிற்காக
கண் விழித்துக் காத்திருந்தேன்
புவி முனையில்...

காத்திருந்து காத்திருந்து
கால்கள் ஓய்ந்து விட
கண்கள் சோர்ந்து விட
தூரத்தில் தேவதையாய்
நீ வருவதைக் கண்டேன்..!
நெடும்பயண களைப்பில்
நடை தளர்ந்து நீ வந்தாலும்
எனைக்கண்டதும்
ஒளிவீசும் வைரமானாய்..!
அவ்வொளி வெளிச்சம்
உனைக் கண்டதும்
என்னுள்ளும் பரவ...!

நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாகச் சூரியன்...
அதனுடைய வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட...
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..! கண்ணிலடி..!
12 comments:

Natu said...

Very Very Nice line ma Excellent...........!

நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாக சூரியன்...
அதனுடைய அன்பு வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..!


I Like this lines
உங்களின் கவிதைக்கு நான் அடிமை


By
Bhuvana

Natu said...

உங்களின் கவிதைக்கு நான் அடிமை

உங்க வீட்டுகாம்மா (Wife) வீட்ல இருக்காங்கப்பா ஜாக்ரதை அடி அதிகமா விழுந்துட போகுது பாத்து
நாங்களும் அருகில் இல்லை காப்பாற்ற ............!

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

கவிதைக்கு நீங்கள் அடிமை என்றால்... உங்களின் அன்பிற்கு நான் அடிமை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
(அடி எல்லாம் விழாது...)

கலா said...

நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்\\\\\\\\

சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை....
என்று பாடியது எனக்கும் கேட்டதப்பு

தூரத்து மின்னலால்...
இவ்வளவு இன்னலா?
ம்ம்மம்ம்ம்ம.....

கலா said...

விழுந்துட போகுது பாத்து
நாங்களும் அருகில் இல்லை காப்பாற்ற ............!\\\\\\
புவனா அதுயாரு நாங்களும்.........?
நானுமா?
நான் அருகில் இருந்தாலும் அடிவிழட்டும் என்று
பாத்துக்கொண்டுதான் இருப்பேன்
ஏனென்றால்........,,,
வீட்டுக்கார அம்மா சாக்கில் யாருக்கோ..!
இது போய்ச் சேருகிறது.
அந்த “யாரு” யாருடா ...........??

புலவர் சா இராமாநுசம் said...

சொற்கள் உங்கள் சொற்படி
வருகின்றன மோகன்
ஆனால் ..
உள்ளேன் ஐயா என்பது
உள்ளே வருவதில்லை
புலவர் சா இராமாநுசம்

மோகனன் said...

வாங்க கலா...

அவள் மின்னல்தான்.. அதில் சந்தேகமில்லை..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

கலா உங்க (நல்ல?) எண்ணம் வாழ்க...
ஒழிக...


இதில் புவனாவும் கூட்டணியா..?

மோகனன் said...

வேலைப் பளுதான் இதற்கு காரணம் புலவர் ஐயா...

வருவேன்... எப்போதும் மாணவனாக...

தங்களின் அன்பிற்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Sangeetha DTERT said...

கவிதை அருமை
சொற்களின் வீச்சும்
பயன்படுத்தும் இலாவகத்திற்கும்
பாராட்டு

அதை விட நண்பர்களின் பகிர்வு
நையாண்டியும் சிரிப்புமாய்


தமிழே தாயே
சொல் வளங்களை எல்லாம்
சிறு சிறு மூளைக்குள் ஒளித்து
சித்து விளையாட்டு காட்டுகிறாய்
வாழ்க நீ என்றென்றும்

மோகனன் said...

தங்களின் பாராட்டிற்கு தன்யனானேன் தேவி..!