'கொண்டான் கொடுத்தான்' என
விளங்கிய தமிழனும்
கேரளனும்
இன்று கொலைவெறியோடு
ஒருவரை ஒருவர்
கொளுத்தி விடப் பார்ப்பதேன்..?
வெள்ளை இனத்தில்
வெளிப்பட்ட
வெளிச்சக் கீற்றாய்
வந்த பென்னி குயிக்
தன் கடைசி 'பென்னி' வரை
செலவிட்டுக் கட்டிய
முல்லைப் பெரியாறால்
வந்த வினையா அது?
வெளிநாட்டில் பிறந்த
பென்னி குயிக்கிற்கு இருந்த
நாடுகடந்த நேசம்
நமக்கில்லாமல் போனதேன்..!
இங்கேயே பிறந்து வளர்ந்த
தமிழனுக்கும்
கேரளனுக்கும் அந்த உணர்வு
இல்லாமல் போனதேன்..?
வேற்றுமையில் ஒற்றுமை
காணச் சொன்ன
நம் இந்தியாவில்
நம் ஒற்றுமையில் வேற்றுமையை
கிளப்பி விட்டவர்கள் யார்..?
அந்த கீழ்த்தர மூடர்கள் யாரென அறிக..?
அரசியல் ஆதாயம் தேடும்
பச்சோந்தி நாய்கள் எவையெனத் தெளிக..!
சிந்திக்கத்தானே ஆறாம் அறிவு..?
அதை சிந்தையிலிருந்தே
அகற்றி விட்டது ஏன்?
அதிகம் படிப்பறிவு பெற்ற
மக்கள் அங்கே மாக்களாய்
தமிழர்களிடம் நடந்து கொள்ள...
நாமும் அதே போல்
நடந்து கொள்ளல் நியாயமா?
வலி என்பது அனைவர்க்கும்
பொது என்றாலும்...
அதையே திருப்பி செய்வது
தமிழரின் மாண்பல்லவே..!
உங்கள் எதிர்ப்பை காட்ட
அமைதியையும் அகிம்சையும்
கையாளுங்கள்...
அமைதியாய் போனால்
அடங்கிப் போவது என்பதல்ல..?
அது அன்பின் வழி எனக் கொள்க..!
அன்னை தேசத்தின் மீதுள்ள
அபிமானம் எனக் கொள்க..!
அமைதியாய் பேசி தீர்த்துக் கொள்க..!
நம்மின் வலி அறிதலை
நையாண்டியாய் கேரளம் கொண்டால்
அவர்களை நையப்புடைக்க
வினாடி நேரம் ஆகாது...
விரைவில் நல் முடிவு வரும்..!
அது வரை கேரளத்து பொருட்களை
புறக்கணியுங்கள்..
கேரளத்து கடைகளை புறக்கணியுங்கள்
இங்கிருக்கும் கேரளர்களை புறக்கணியுங்கள்
நம் வலி(மை)யை
ஆதிகாலம் தொட்டே
அவர்களறிந்திருப்பர்...
சிறுநரி ஊளையிட்டு
சிறுத்தை ஓடாது என்பதை
கேரளனுக்குக் காட்ட
விரைவில் நமக்கு காலம் வரும்..!
அன்பால் கட்டுண்டோம்...
காத்திருப்போம்...
காலம் வரும் சாதிப்போம்..!
******************************
ஆர். சரண்யா என்பவர் 'மழையினை ரசிக்கும்' என்ற கவிதைக்கு பின்னூட்டமிடுகையில் 'வலி அறிதல்' என்ற தலைப்பில் கவிதை கேட்டார். அதை இன்றைய முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இணைத்து எழுதியிருக்கிறேன்... நன்றி..!
******************************
Very Nice!!!!!!!
I Need kavithai for the topic of Vali arithal!!!!!!
Saranya R