ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, February 27, 2010

உன்னோடு என் இதயத்தையும்..!


ஒரு மாதம் எனைப் பார்க்க முடியாது
என்ற காரணத்தால்
எனைப் பிரிய மனமின்றி
உன்னோடு என் இதயத்தையும்
கொண்டு செல்கிறாய்..!
நானோ உன் நினைவுகளை
சுமந்தபடி நாட்களுடன்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்..!
அந்நாட்களை வென்று விட்டால்
நீ என்னருகே வரும் நாள்
வந்து விடும் என்பதற்காக..!


(காதலனை விட்டு விட்டு, அவனது காதலி, அவளது ஊருக்குச் செல்கிறாள்... வருவதற்கு ஒரு மாதமாகுமென்றாள்... அவளின் பிரிவைத் தாளமாட்டாமல் அக்காதலன் எழுதிய கவிதை..!)




Thursday, February 25, 2010

அடிக்கடி நீ எனை..?


வண்ண மயிலிறகின் மேனியடி - நீ
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி - உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி - உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி - உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி - உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி - என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி - முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது... போதாது  உன் குறும்புகளடி - நீ எனை
அடிக்கடி அடித்தணைக்க வேண்டுமடி..!




Wednesday, February 24, 2010

உயிரே… உம் என்று சொல்..!


உயிரே… உம் என்று சொல்
மணலை மலையாக்குகிறேன்
மடுவை கடலாக்குகிறேன்
கடலை குளமாக்குகிறேன் என்றெல்லாம்
பொய்யுரைக்க விரும்பவில்லை..
நீ என் காதலியானால்...
உன்னுள் நானிருப்பேன்..!
உனக்காகவே வாழ்ந்திருப்பேன்..!
உன் உயிரோடு கலந்திருப்பேன்..!
என் சொல்கிறாய் என்னன்பே..!



Monday, February 22, 2010

அதுவரை என்னுள்ளேயே..!


என் அன்பின் அன்பே..!
உனை என் மனதில்
ஆழமாகப் பதித்து விட்டேன்..!
அழகே நீ பதறாதே..?
பத்திரமாய்... பவித்திரமாய்
நீ என்னுள்ளே கலந்திருப்பாய்..!
அந்த இன்பத்தில்
நான் களித்திருப்பேன்..!
காலம் வந்ததும்
உனைக் கரம் பிடிப்பேன்..!
அதுவரை என்னுள்ளேயே வசித்திடு..!



Thursday, February 18, 2010

எனை விட்டுச் செல்லாதே..!


நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!



Wednesday, February 17, 2010

உன்னை நினைத்தாலே போதும்..!


உன்னை நினைத்தாலே போதும்
என் பேனாவிற்கு…
உடனே அது காகிதத்தை
முத்தமிடத் தொடங்குகிறது..!
உனைப் பற்றி
கவிதையாய் வடிப்பதற்கு..!
உன்னை நான் நேரில்
சந்தித்தால் போதும்…
உடனே உன் செவ்விதழில்
முத்தமிடத் தோன்றுகிறது…
உன்னைப் போன்றதொரு
அழகான கவிதையைப் படைப்பதற்கு..!