ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, February 22, 2010

அதுவரை என்னுள்ளேயே..!


என் அன்பின் அன்பே..!
உனை என் மனதில்
ஆழமாகப் பதித்து விட்டேன்..!
அழகே நீ பதறாதே..?
பத்திரமாய்... பவித்திரமாய்
நீ என்னுள்ளே கலந்திருப்பாய்..!
அந்த இன்பத்தில்
நான் களித்திருப்பேன்..!
காலம் வந்ததும்
உனைக் கரம் பிடிப்பேன்..!
அதுவரை என்னுள்ளேயே வசித்திடு..!2 comments:

திவ்யாஹரி said...

"யாழினி" பற்றி எழுதி, எழுதி அவங்கள பார்க்கணும்னு எங்களுக்குள்ளும் ஆசையை விதைத்துவிட்டீர்கள் மோகனன்..

மோகனன் said...

என் மனத்தினுள் இருக்கும் தேவதையின் வாசம்... சுவாசமாய் மாறும் போது.. இப்படி கிறுக்குகிறேன் தோழி... அவ்வளவே..!

அவள் முகம் காட்ட விரும்பாத முழுமதி... என்னைக் கொள்ளை கொண்ட நிறைமதி..! என்னுடைய யாழினி..!

தங்களின் வருகைக்கும்… வாசிப்பிற்கும்… அழகான கருத்திற்கும் மிக்க நன்றி தோழி…

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!