ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, February 27, 2010

உன்னோடு என் இதயத்தையும்..!


ஒரு மாதம் எனைப் பார்க்க முடியாது
என்ற காரணத்தால்
எனைப் பிரிய மனமின்றி
உன்னோடு என் இதயத்தையும்
கொண்டு செல்கிறாய்..!
நானோ உன் நினைவுகளை
சுமந்தபடி நாட்களுடன்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்..!
அந்நாட்களை வென்று விட்டால்
நீ என்னருகே வரும் நாள்
வந்து விடும் என்பதற்காக..!


(காதலனை விட்டு விட்டு, அவனது காதலி, அவளது ஊருக்குச் செல்கிறாள்... வருவதற்கு ஒரு மாதமாகுமென்றாள்... அவளின் பிரிவைத் தாளமாட்டாமல் அக்காதலன் எழுதிய கவிதை..!)
6 comments:

க.பாலாசி said...

சரி... அந்த காதலன் நீங்களா???

கவிதை இயல்பாய்...

மோகனன் said...

சரியான கள்ளனய்யா நீர்... உண்மையை கண்டு பிடித்து விட்டீரே...

சே.குமார் said...

கவிதை அருமை.

மோகனன் said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பா...!

திவ்யாஹரி said...

//சரியான கள்ளனய்யா நீர்... உண்மையை கண்டு பிடித்து விட்டீரே...//
இதை கண்டு பிடிக்க சிபிஐ வேணுமா நண்பா? நல்ல கவிதை..

மோகனன் said...

வாங்க திவ்யா...

உங்கள மாதிரி ரசனையான மனிதர்கள் இருக்கும் போது... சிபிஐ எல்லாம் வீண் என்றே தோன்றுகிறது...

வருகைக்கும்.. வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி...!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!