ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, February 25, 2010

அடிக்கடி நீ எனை..?


வண்ண மயிலிறகின் மேனியடி - நீ
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி - உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி - உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி - உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி - உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி - என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி - முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது... போதாது  உன் குறும்புகளடி - நீ எனை
அடிக்கடி அடித்தணைக்க வேண்டுமடி..!
2 comments:

சி. கருணாகரசு said...

சரி... நடக்கட்டும்.

“அடி”க்கடி... எழுதுங்க.

மோகனன் said...

வாங்க கருணாகரசு... 'அடி'க்'கடி' வராம இருந்தாலும்... தொபுக்'கடீ'ர்னு வந்து வாழ்தினதுக்க நன்றிங்க..!