பத்து மாதங்கள் சுமந்து
பெற்றெடுப்பது மட்டுமல்ல
பத்து வினாடிகள்
மனதில் சுமந்து
மனதில் சுமந்து
பெற்றெடுப்பது கூட குழந்தைதான்..!
என் கவிதைகளைத்தான்
குழந்தை என்று சொல்கிறேன்..!
அதிலும் அக்குழந்தை...
எனக்குப் பிறந்த
எனக்குப் பிறந்த
குழந்தை என்பைதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான்
சொல்(ல விரும்பு)கிறேன்..!
அதெப்படியடா
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
என்று நீ கேட்கலாம்...
ஆணும் பெண்ணும்
உடலளவில் சேர்வதால்
கண் நிறைந்த குழந்தை பிறக்கிறது..!
உன்னோடு என் நினைவுகள் சேர்வதால்
கவிதையெனும் குழந்தை பிறக்குதடி..!
கண் நிறைந்த குழந்தைக்கு
காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான்
தாய் சொன்னால்தான்
தந்தை யாரென்று தெரியவரும்..!
என் கவிக்குழந்தைக்கோ...
தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு
தாய் நீ என்று தெரிய வரும்..!
தாய் நீ என்று தெரிய வரும்..!
கருவைச் சுமப்பதால் நீ தாயாகிறாய்...
உன்னையும் உன் உணர்வுகளையும்
நம் கவிக்குழந்தைகளையும்
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!
(இது என்னுடைய 250-வது கவி(க்குழந்)தைப் பதிவு... இதனை எனது அன்பிற்கினியவளுக்கும், இவ்வுலகில் அன்பைச் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்..!
தொடரும் உங்களது மேலான ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்)
தொடரும் உங்களது மேலான ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்)
16 comments:
வாழ்த்துக்கள்..
vazhthukkal ma nalla erukku
ennum adhiga ma eathir parkkirom.....
வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சமுத்ரா..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க அஞ்சலி...
என்னால் இயன்றவரை எழுதுகிறேன்... ஆனால் என் இறுதி மூச்சு உள்ள வரை எழுதிக் கொண்டேதான் இருப்பேன்...
வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Ungal 250th kavidai superb!.
Ungal kavidai Kulanthaigal 2500 Aga Valarnthida I want to pray for You!
நன்றி.. நன்றி..!
ஒரு தேவதை வரம் தந்துவிட்டது... அப்புறமென்ன... அசத்திடுவோம்..!
congratulations..!
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...!
தங்களைப் பற்றி நான் அறிந்து கொள்ளலாமா?
கவிதை மிகவும் அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.
நன்றி லக்ஷ்மி அம்மா..
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
nice.................
நன்றி சக்தி அவர்களே...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
un kavithyodu sernthathal nanmattum un kavi kulanthyku thayaga irukkiren.
viji
என் கவிதைக்கு நீங்கள் தாய் என்று சொன்னது உண்மையில் என் மனதிற்கு இனம்புரியாத மகிழ்ச்சியைத் தருகிறது...
இதற்கு மேல் என்ன சொல்ல... என்னிடம் வார்த்தை ஏதும் வரவில்லை..
நன்றி விஜி... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
NICE...
(சு)வாசித்தமைக்கு மிக்க நன்றி சௌந்தராம்பிகை..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment