அன்னையின் கருவினில்
ஆலம் வித்தாகி
பூமியின் மடியினில்
ஆலமரமாகி
நின்று நிழல் தர போராடுகின்றேன்..!
அன்னையின் வயிற்றினில்
அடர்ந்த இருட்டினில்
கண்மூடி வாழப் பழகியதால்
அகிலத்து இருட்டினில்
கண் திறந்து வாழப் போராடுகின்றேன்..!
அன்னையின் மடியினில்
தவழ்ந்த போது
வறுமையும் என்னை வளர்த்தது...
என்னுடன் அதுவும் வளர்ந்ததால்
வறுமையைப் போக்க போராடுகின்றேன்..!
அன்னையின் வளர்ப்பினில்
அன்பைக் கண்டு
தந்தையின் வளர்ப்பினில்
அகிலத்தைக் கண்டு
அறிவனாய் வாழ போராடுகின்றேன்
போரட்டம் மிகுந்த உலகத்தில்
போராட நீயும் வா என்று
என் தாயும் என்னை
பிறப்புவித்தாள்..!
அவளிச்சைப்படியே பிறந்தேனின்று..!
எங்கும் எதிலும் வென்று விட
போட்டி, பொறாமைகளை தகர்த்து விட
எனைப் பெற்ற எந்தன் பெற்றோர்களே
எனக்கு எல்லா வரங்களையும் அளித்தருளும்
உம் பாதங்களில் எனக்கும் இடமருளும்..!
8 comments:
அழகான வரிகள்!
hi friend...
so sweet ur's kavidey ..!
அன்பு சினேகிதிக்கு...
ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க அனுஷா...
ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
ஏப்ரலில் உதித்த
எழுச்சி புயலே
பங்குனி மாதத்து
பெளர்ணமி நிலவே
கானகம் கண்டெடுத்த
கவிக் குயிலே
உலகின் இத்தனை
நாட்களும் விடிந்ததற்கு
எத்தனையோ காரணம்
இருக்கலாம்...
ஆனால்
இன்றொருநாள் விடிந்தது
உனக்காக மட்டும்!
உன் வாழ்வு வளம் பெற்று
உன் பெற்றோர் மனம்போல
வாழ்ந்தோங்க! வாழ்த்துகிறேன்...
- ஜோதி
இந்த பாராட்டுக்களுக்கு பொருந்தாதவன் நான்...
மிகவும் சிறியவன், எளியவன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்..!
- ஜோதி
எல்லோரையும் விட எளியவனாகவே இருக்க விரும்புகிறேன்...
நன்றி
Post a Comment