தன்னை விற்று
பிழைப்பு நடத்தும்
வேசி கூட
ஐந்து நிமிடத்திற்கு மட்டுமே
காசு கொடுத்தவனுக்கு
அடிமையாக இருக்கிறாள்..!
ஒர் ஓட்டுக்காக
உன்னை விற்றால்
ஐந்து ஆண்டுகளுக்கு
நீ அடிமையாகப் போவது
மட்டுமின்றி...
அன்னை பாரதத்தையும்
ஊழல்வாதிகளிடம்
அடிமையாக்கி விடுவாய்..!
அரசியல் கொள்ளைக்காரர்களின்
ஓட்டுக்காக விலை போனால்
தாய்நாட்டினை அடிமைப் படுத்தும்
நவீன வெள்ளைக்காரனாகிவிடுவாய்..!
உன்னை விற்காமல்
உண்மையாய் ஓட்டளி...
ஒழுங்கான ஆட்சிக்கு
ஒழுக்கமாய் வாய்ப்பளி..!
(இதையும் படிங்க: அரசியல்வாதியின் வேண்டுதல்..!)
(வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி ஜனநாயகக் கடமை... ஓட்டிற்காக உங்களை விற்காமல், கம்பீரமாக செல்லுங்கள்...கண்ணியமாய் வாக்களியுங்கள்..!)
4 comments:
ரொம்ப அருமையாக இருக்கிறது, தமிழகத்தின் இன்றைய நிலையை சரியாக தங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள்...
இதுபோன்ற கவிதைகள் இணையதளத்தில் இருப்பதை
விட, அனைத்து மக்களும் படிக்கும் வகையில் சில புத்தகங்களில் தாங்கள்
வெளியீடுசெய்தால் மிக பயனுள்ளதாக இருக்குமே...
- ஜோதி
Hi,
I need kavithai for below topic
Perithinum Perithu Kel..!
வாங்க ஜோதி...
பாராட்டியமைக்கு நன்றி... புத்தகங்களுக்கு வேண்டுமெனில் நீங்கள் அனுப்புங்களேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
தலைப்பு அருமையாக தேர்ந்தெடுத்திருக்கிறீர் சரி...
இது எதைக் குறித்து இருக்க வேண்டும் என்று கொடுத்திருக்கலாம்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment