அண்ணலின் வழி நின்று
அரசினை எதிர்த்து
அஹிம்சையின் வழி நின்று
அரசினை அசைத்த
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!
அடிதடி செய்யாமல்
ஆர்ப்பாட்டம் செய்யாமல்
பேருந்தைக் கொளுத்தாமல்
பெட்டிக் கடைகளை நொறுக்காமல்
ரயில்களை நிறுத்தாமல்
அமைதியின் வழி நின்று வென்ற
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!
தாங்கள் ஊரறிந்த
சினிமா பிரபலம் இல்லை
தாங்கள் உலகறிந்த
விளையாட்டு வீரரும் இல்லை...
காந்தியவாதியாய் இருந்தும்
பிரபலமாகவில்லை...
121 கோடி மக்களுக்காக
உங்கள் ஒருவரை
வருத்திக்கொண்டதால்
எங்களின் மனதில் பிரபலமான
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!
தலைகுனிந்து நின்ற இந்தியனை
அவன் தரணியே ஆண்டவன் என்றாலும்
தலைநிமிர்ந்து கேள்வி கேட்கும்
தகவலறியும் உரிமைச் சட்டம்தனை
தாய்நாட்டில் நடைபயில வைத்த
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!
பலகோடி உயிர்கள் ஊழலின்றி வாழ
தன்னுடலை வருத்திக் கொண்டு
தன்னாவியைக் கரைத்துக் கொண்டு
உலகத்துப் பார்வையை
உண்மையின் வசம் திருப்பிய
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!
ஊழல் இங்கே இருக்கும் வரை
ஏற்றத் தாழ்வுகள் நிலைத்திருக்கும்
ஏழைகள் வாழ்வு பழித்திருக்குமென அறிந்து
ஊழலை இங்கே ஒழித்தெடுக்க
எவருக்கும் திரணியில்லையென அறிந்து
எழுபத்திமூன்று வயதினிலும்
இளைஞனைப் போல செயல்பட்டு
அஹிம்சையால் வென்ற
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!
ஏழைகள் சிரிப்பதுமில்லை...
ஆதலால் இங்கே
ஏழையின் சிரிப்பினில்
எவனையும் காணமுடிவதுமில்லை...
தங்களின் சிரிப்பினில்
வெற்றியின் மமதையில்லை...
121 கோடி இந்தியக் குழந்தைகளின்
சிரிப்பாகவே காணுகிறேன் ஐயா..!
உன் வழியைப் பின்பற்றி
என் இளைய சமுதாயம் வளரும்
இந்தியா ஒரு நாள் மாறும்..!
ஊழலுக்கெதிரான ஒரு சிறு தீப்பொறி
இன்றொரு தீபமாய் மாறியது
உங்களால்தான்..!
நாளை அது தீப்பந்தமாவதும்
தீச்சுடும் எரிமலையாவதும்
உங்களால்தான் ஐயா...
அண்ணலின் இளவலே நீர் வாழி..!
நின் தேசப்பற்று வாழி..!
இவர் வழி நடந்திட இந்தியாவே வா நீ..!
(அண்ணலின் இளவலுக்கு கிடைத்த இவ்வெற்றி, சத்தியத்திற்கும் அஹிம்சைக்கும் கிடைத்த வெற்றி...!)
6 comments:
அன்னா வெற்றியின் பரிசாக உங்கள் கவிதை இருக்கிறது...
வாழ்க ஜனநாயகம்...
.///
(அண்ணலின் இளவலுக்கு கிடைத்த இவ்வெற்றி, சத்தியத்திற்கும் அஹிம்சைக்கும் கிடைத்த வெற்றி...!)///////
உண்மை....
வாழ்த்துக்கள்..
நன்றி தோழா...
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
இது இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து இந்தியர்களின் வெற்றி நண்பா...
அவரைப் போல நாமும் மாறுவம்... பல மாற்றங்களைத் தருவோம்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
உங்கள் உணர்வு விளிம்பில்
விழாமல் பிடித்திருக்கும் “பற்று”
வலையில்...தமிழ்ப் .பின்னலால்
தழையத் தழையப் பின்னி
தவழவிட்ட நடையழகு
நன்றி நண்பரே!
மோகனன்,நீங்கள் நடித்த
டாகுமெண்டரி படம்
எல்லாமே அருமை
நல்ல எடுத்துக்காட்டு
அனைவருக்கும் நன்றியுடன்
வாழ்த்துகளும்.....
மேலும் இவைகளைப்போல்
நல்லவைகளுடன்..
தொடரட்டும் பணி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கலா...
தமிழ்தான் என்னை பின்னிவைத்துள்ளது...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment