ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, July 20, 2011

உன் காதலுக்கு..!



கவிச்சக்கரவர்த்தி கம்பன்...
மகாகவி பாரதியார்...
புரட்சிக்கவி பாரதிதாசன்...

என மாபெரும் கவிஞர்களைப் போல
எனை ஆக்க விட்டாலும்
ஒரு குறுங் கவிஞனாக
மாற்றிய பெருமை
உன் காதலுக்கு உண்டு கண்ணே..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )




14 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு கவிஞரே.

மோகனன் said...

நான் கவிஞனில்லை தோழா...

என்னவள் என்னைப் பார்த்து சொல்லியிதை இங்கே குறிப்பிட்டிருக்கி
றேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த பெண்களுக்கு இப்படி கவிஞர்களை உறுவாக்குவதே பெரிய வேலையாகிவிட்டது...

மோகனன் said...

என்னங்க செய்யறது சௌந்தர்..

அதனாலதான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலேன்னு நம்ம முன்னோர்கள் சொன்னாங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Rajarajeswari .R said...

Thanks for u..!

மோகனன் said...

நன்றி தோழியே..!

கலா said...

எனை ஆக்க விட்டாலும்\\\\\

எனை ஆக்காவிட்டாலும்....

அப்ப,உங்க கண்ணே!தான் உங்களைக்
கவிஞராக்கியதா? சரி,கண்ணு பத்திரம்
கவிதை எழுத..........

அம்பாளடியாள் said...

இந்த பெண்களுக்கு இப்படி கவிஞர்களை உறுவாக்குவதே பெரிய வேலையாகிவிட்டது...

உண்மையச் சொன்னீர்கள் சகோ .
நல்ல கவிதை வாழ்த்துக்கள் .

மோகனன் said...

வாங்க கலா...

கண் எனக்கு இங்கே இல்லை... எல்லாம் என்னவள் மீதுதான்...
கண்ணிருப்பதே அவளைக் காணத்தானே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாரும் அடியாளே வாரும்...

ரசித்து வாழ்த்தியமைக்கு எனது நன்றிகளை பெற்றுக் கொள்ளும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாரும்..!

Unknown said...

மோகன் ஒரு சின்ன மாறுதல்...

//எனை ஆக்க விட்டாலும்
ஒரு குறுங்-தொகைக் கவிஞனாக
மாற்றிய பெருமை
உன் காதலுக்கு உண்டு கண்ணே//

எப்படி.. ? நல்லாயிருக்கா!

புலவர் சா இராமாநுசம்

மோகனன் said...

அன்பின் பெரியவரே...

நான் மோகனன்... (மோகன் என்பது எனது தந்தையார் பெயர்...)

தாங்கள் சொல்லும் அளவிற்கு தொகை கவிஞன் இல்லை அய்யா...

கிறுக்கன் அவ்வளவே... தங்களின் மேலான அன்பிற்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anonymous said...

நன்றாக அமைந்திருக்கின்றன வரிகள் நண்பரே..

கவி அழகு!

மோகனன் said...

தங்களின் ரசனையான வரிகளுக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!