ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 1, 2010

நீ உதிர்க்கும் புன்னகை போல...!

ஒற்றையாய் நிற்கும்
அந்த ரோஜா மலர்..!
கொட்டும் உறை பனியில்
விடிய விடிய நனைந்த படி
இருந்தாலும்...
அதிகாலையில்
கதிரவனைக் கண்டதும்
அம்மலர் புன்னகைத்தபடியே
உற்சாகமாய்ப் பூ பூக்கும்...
எனைப் பார்த்ததும்
உன் முகம் மகிழ்ச்சியில் பூத்தபடி
நீ உதிர்க்கும் புன்னகை போல...!2 comments:

மதுரை சரவணன் said...

ஆம். பூதான் என்றும் மலர்கிறது. மீதி எல்லாம் உதித்தலும் மறைதலும் தான். வாழ்த்துக்கள்

மோகனன் said...

தங்களின் மேலான வருகைக்கும்... அழகான கருத்துரைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!