ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 15, 2010

எனக்காக எழுதப்பட்ட கவிதை..!

ன் கண்ணெனும் கேமரா
சிறை பிடித்த கவிதைகளில்
மாபெருங் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் கண்ணை விட்டு என்றும்
அகலாமல் இருக்கிறாய்..!
என் இதயமெனும் இதழ்
படித்தக் கவிதைகளில்
மாபெரும் இன்பக் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் இதயத்தை விட்டு என்றும்
விலகாமல் இருக்கிறாய்..!
புரிந்து கொண்டேன் பெண்ணே...
எனக்காக எழுதப்பட்ட கவிதை
நீ என்று..!6 comments:

யூர்கன் க்ருகியர் said...

இது ஒரு நல்ல கவிதை !

மோகனன் said...

அப்ப மத்தெல்லாம்..?

தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

கவிதைக்குக் கவிதை எழுதி
கவிதையைப் படிக்கச் சொன்னால்
கவிதையைத் தையலா{ள்}ல்
தரமென்று பூ போட்டு முடித்தேன்

சி. கருணாகரசு said...

கவிதை மிக அழகு....
இது ”உங்களுக்காக எழுதபட்ட கருத்துரை”

மோகனன் said...

அன்பு நிறை தோழிக்கு...

தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அன்புத் தோழர் கருணாகரசு அவர்களே ...

தாங்கள் என் கவிதையின் பாலிட்ட கருத்துரைக்கு மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!