ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, June 4, 2010

கவி நேசனின் கவிமகனே..! - பிறந்த நாள் கவிதை..!

மையவளின் இளைய மகனே..!
உற்சாகத்தின் இருப்பிடமே..!
வி நேசனின் கவிமகனே..!
கவி நிலவாய் சிரிப்பவனே..!

கிலமாளப் பிறந்தவனே...
அன்பிறகினிய திருமகனே...
கிள்ளை மொழி பேசிப் பேசி...
கிட்டா இன்பம் தந்தவனே...
ட்சம் பொன் கொடுத்தாலும்
தமிழ் மகவே உனக்கிணையில்லை?.
ன்றோடு நீ பிறந்து ஆண்டிரண்டு
ஆயிற்று... மனமகிழ்ச்சியும் கூடிற்று..!

பிறப்பால் எமை மகிழ்வித்தது போல்
உன்னுடைய நற்செயலாலி
வாப் புகழடைந்து...
உன் தாயை மகிழ்விப்பது மட்டுமின்றி
ந்தியாவையே மகிழ்விப்பாயடா..!
இதேசத்தில் நீ பிறந்தமைக்கு நல்
டமொன்றை பதிப்பாயடா..!
அதில் நல்லோரை சேர்ப்பாயடா..!
நானிலம் போற்றும் படி
நனி மகவே நீ வாழ - நல்லு
ள்ளங்கள் வாழ்த்துகிறது..!
இன்று போலெனெறும் வாழ்க..!

(எனது இளைய மகனுக்கு  இரண்டாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாக படித்துப் பாருங்கள்... என் மகனின் பெயர் கிடைக்கும்)
6 comments:

சத்ரியன் said...

இளையகவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Ganesan said...

மிக்க நன்றி தோழரே...

தங்களின் வாழ்த்து என் மகவை வாழவைக்கட்டும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

அகிலனுக்கு இவ்வகிலமே
போற்ற என் அன்பான
பிறந்தநாள் வாழ்த்துகளுடன்...
என் அன்பு முத்தங்களும்

மோகனன் said...

அன்பு நிறை தோழியே...

தங்களின் வாழ்த்து என் மகனை வாழவைக்கட்டும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

cheena (சீனா) said...

அன்பின் மோகனன் கணேசன்

இளைய மகன் அகிலனுக்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அகிலன் அகிலத்தையே வென்று பெரும் புகழுடன் வாழ நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

தங்களின் வாழ்த்து என் மகனை வாழவைக்கட்டும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!