ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 29, 2010

சொல் தேவி சொல்..?

உன் நிழல் சிறிது தடுமாறினாலும்...
என் நிஜம் தடுமாறுகிறது...
உன் குரல் சிறிது தடுமாறினாலும்...
என் சித்தம் தடுமாறுகிறது...
உன் கண்களில் சிறிது நீர் கோர்த்தாலும்...
என் கண்களில் குருதி கோர்க்கிறது...
ஒற்றையாளாய் நீ அங்கே துவளும்போது
கற்றையாய் நான் இங்கே வீழ்ந்து போகிறேன்...

நீ படும் துயரங்களை எல்லாம்
செல்பேசியில் என்னிடம் சொல்லும் போது...
என் உடலின் செல்களனைத்தும்
செத்து விடத் துடிக்கின்றன..!
உன் துன்பத்தை தடுக்க முடியாமல் போனால்
மாண்டு விடுவதே மேலென்று
மண்டியிட்டு கதறுகின்றன..!
உன்னோடு நானிருக்கையில்
துன்பப்படலாமா..? நீ துயரப்படலாமா..!
சொல் தேவி சொல்..?2 comments:

கலா said...

மோகனன் சீக்கரம் போய்ச் சீர்படுத்துங்க
அவக அழுக..நீங்களும் அழுக அப்புறம்
யாரு பஞ்சாயத்து?

நான் வரமாட்டேனப்பா.........

மோகனன் said...

கண்டீப்பாக தோழி...

என் மனமழுதாலும்... அவளை அழவிடாமல் பார்த்துக் கொண்டேன்...

அவளினி அழமாட்டாள்...

(நாங்க யாரையும் கூட்டு சேர்த்துகிறதில்ல..!)

நன்றி தோழி... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!