ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, April 8, 2011

அங்கே ஓர் ஆன்மா..! - அண்ணா ஹசாரேவுக்காக..!



நியாயவிலைக் கடைகளில்
நிற்பதை விட
ஸ்டேடியத்தின் வாசலில்
அடங்காக் கூட்டம்
ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வாங்க..!

அடிதடியில் ஆரம்பித்து
அரைவட்ட சுவரைத் தள்ளியது...
போலிஸ் தடியடியை
வாங்கிய பின்னரும்
வரிசையில் நின்று
டிக்கெட்டை வாங்கிப் போனது
இந்திய சமுதாயம்..!

ஐபிஎல் போட்டிகள்
ஆரம்பித்து விட்டால் போதும்
சாதி, மொழி, இனம் கடந்து
ஆதரவுக் கரங்கள் பெருகும்
ஆசைகள் கண்களில் விரியும்...
இந்திய ஒற்றுமைகள் அனைத்தும்
ஒவ்வொரு இந்தியனின்
கன்னத்தில் கொடியாய் விரியும்...
உற்சாக வசனங்கள் கைகளில் மின்னும்..!

ஒவ்வொரு அடிக்கும்
உற்சாக குரல்கள் விண்ணை முட்டும்!
திரை உலக கனவான்களும்
தங்கள் பணப்பங்குக்கு
தத்தமது அணிகளை
உற்சாகப் படுத்தும் சாக்கில்
ஊரைச் சேர்ப்பார்கள்..!

ஊழலின் ஊற்றுக் கண்ணை
அழித்தெடுக்க
அங்கே ஓர் ஆன்மா
தன் உயிரை
காற்றில் கரைத்துக் கொண்டிருக்க...
அரசாங்கம் கை கட்டி வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க...
அவருக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஆளில்லை
அவர் வழியில் போராட
இங்கே எவனுக்கும் திரணியில்லை..!

ஊழலுக்கெதிராக நாம் திரளுவதா?
சே... சே... நமக்கு வேற
வேலை வெட்டி இல்லையா என்ன?
ஐபிஎல் போட்டி இருக்கு...
தலைவரோட சினிமா படமிருக்கு...
இரவு விடுதி நடனமிருக்கு...
தாகம் தீர்க்க டாஸ்மாக்கிருக்கு...
ஏய்த்துப் பிழைக்க தேர்தலிருக்கு...
இதென்ன உண்ணாவிரதப் பேச்சு...
போ.. போ... போ..!

அட என்னே ஒரு ஒற்றுமை...
என்னே ஒரு பண்பாடு...
வாழ்க பாரத மக்கள்...
வளர்க பாரத சமுதாயம்..!
போங்கடாங்க...
நீங்களும் உங்க நாட்டுப் பற்றும்..!

(அண்ணா ஹசாரேவின் போராட்டம் வெற்றி பெற தோள் கொடுப்போம் வாரீர்..!)




8 comments:

Rajiv said...

நியாயவிலைக் கடைகளில்
நிற்பதை விட
ஸ்டேடியத்தின் வாசலில்
அடங்காக் கூட்டம்
ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வாங்க..!

Is this great line to all cricket crazy fans

மோகனன் said...

நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

natarajanp said...

Unarvupoorvama Varikal Very Nice....

By
Bhuvana

Jothi said...

பாரதம் வளர வேண்டும் என்றால் இந்த மோகனன் போல இன்னும் பல மோகனன் தோன்ற
வேண்டும், உங்கள் உள்ளத்தில் உதித்தது போல் அனைவருடைய உள்ளத்தில் இந்த
உயர்ந்த எண்ணங்கள் உதிக்க வேண்டும்...

மிக நன்றாக இருக்கிறது மோகனன்

- ஜோதி

மோகனன் said...

வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி புவனா

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

என்னைப் போல் யாரும் வரவேண்டாம்... எல்லோருடைய மனத்திலும் எழுச்சி மிகு எண்ணங்கள் வந்தால் போதும் தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

MOHAN
NICE JOB YOU ARE DOING BEST OF LUCK AND THANKS FOR ALL OF THIS

மோகனன் said...

அன்பின் தோழர் அரவிந்த் அவர்களுக்கு

தங்களின் வாழ்த்திற்கு தலைதாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!