ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, June 2, 2011

அகதிகளாய் நாம்..!


நம் கண்களிரண்டும்
ஒன்றாக கலந்த நாளிலிருந்து
உன்னிடத்தில் நானும்...
என்னிடத்தில் நீயுமாய்
வாழ்ந்து வருகிறோம்..!

என்ன சாப்பிட்டாய்...
ஏது செய்கிறாய்...
என்று இங்கிருந்து நான் வினவ
அங்கிருந்து நீ வினவியபடி...
நம் விசாரிப்புகளை நீட்டிக்கிறோம்..!

அருகருகே உள்ள வீடுகளில்
குடியிருந்தாலும்...
நம் பெற்றோர்கள் இட்ட
சண்டைகளினால்
அகதிகளாய் நாம்..!

(கிராமத்து காதலர்களுக்காக எழுதிய கவிதை இது..!)
----------------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3)


(நானெழுதிய கானா பாடலை படிக்க : மலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..!)




8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

இப்படிக்கூட அகதிகள் உருவாகிறார்களா...?

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது.

மோகனன் said...

வாங்க முனைவரே...

இப்படி உருவாகும் அகதிகள் விரைவில் விடுதலை பெறத்தான் துடிக்கிறார்கள்... அன்புச் சிறையில் அகப்பட...

வருகைக்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க நண்பரே...

கவியை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க
நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

கவிதைக்கு ஏற்ப படம் அமைந்துள்ளது

மிகவும் அருமையான கவிதை

By

புவனா

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

மோகனன்,காதலிச்சா! இவ்வளவு கஷ்ரப்பட
வேண்டுமா?
ஆனால் இப்பெல்லாம்....கிராமத்துக்காதல்கள்
பல முன்னேற்றமடைந்திருக்கிறது

மோகனன் said...

வாங்க கலா...

காதல் என்ற வார்த்தையை சொல்வது சுலபம், செய்வது கடினம்...

தாங்கள் சொல்வதில் பாதி
உண்மைதான்... இன்னும் பல கிராமங்கள் இப்படித்தான் உள்ளன...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!