ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, June 29, 2011

பொன் கிடைத்தாலும்..!



பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )




4 comments:

Bhuvana said...

very nice linesma சூப்பர்.....................!

ம் ம் ம் ம் ......... ? காத்திருங்கள் ....காத்திருங்கள் ....!

தனிமையில் காத்திருப்பதிலும் தனி சுகம் இருக்கு நண்பரே ..........!
நண்பருக்கு கொஞ்ச நாட்களாக காதல் அலை மிகவும் பெருகி கொண்டுருகிறது..........!
என்னவென்று யார் அறிவரோ ..........!

சரி .......இந்த கவிதையல்லாம் உங்க வீடுகாரம்மா படிக்க மாட்டங்கன்னு நினைகிறேன் ................................................

By
Bhuvana

மோகனன் said...

காத்திருக்க வைப்பதுதானே கன்னியரின் குணம்...

காத்திருக்கிறேன்... அதை விட வேறு என்ன வேலை..!

வீட்டுக்காரம்மாகிட்டயா..? எதுக்கு என்னோட வீட்டுக்கார அம்மா (House Owner) இதை படிக்கணும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Tamizharasi said...

hi
its very nice

by
tamizh.

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!