ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, June 27, 2011

வான் மகளாய் நீயிருக்க..!பூத்தாலும் நட்சத்திரமாய் பூக்கிறாய்..!
சிரித்தாலும் வெண்ணிலவாய் சிரிக்கிறாய்..!
தும்மினாலும் பனித்துளியாய் தும்முகிறாய்..!
பார்த்தாலும் மின்னலாய்ப் பார்க்கிறாய்..!
இறங்கினாலும் என்னுள் இடியென இறங்குகிறாய்..!
விரிந்தாலும் கார்மேகக் கூந்தாலாய் விரிகிறாய்..!
இப்படி வான் மகளாய் நீயிருக்க...
புவிமகனாய் காத்திருக்கிறேன்...
உன் காதலெனும் மழைப்பொழிவிற்கு..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )

8 comments:

Natu said...

சூப்பரா இருக்கு தோழா ...!


அடித்தாலும் இடியை போல் அடிக்கிறாள் என்று ஒரு வரியை காணவில்லை
மறந்து விட்டிர்கள் போலும் ............

By
புவனா

மோகனன் said...

வாங்க மேடம்..

நீங்க சொல்றது எனக்கு இடிக்கும்.. அதான் சொல்லல.. அவ என்ன இடிக்கமாட்டா.. கண்ணாலயே கடிப்பா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

புலவர் சா இராமாநுசம் said...

இப்படி வான் மகளாய் நீயிருக்க...
புவிமகனாய் காத்திருக்கிறேன்...
உன் காதலெனும் மழைப்பொழிவிற்கு..!
--------------------------------------------------------
பொற்பனைய கற்பனையை
சொற்பொழிய சுவை- தேன்
மோகன் நல்ல கவித்தேன்
மோகன்
புலவர் சா இராமாநுசம்
நேரமிருத்தால் என் வலைப் பக்கம்
வந்து பாருங்கள்
முகவரி- புலவர் குரல்

மோகனன் said...

புலவர் பெருந்தகைக்கு...
இச்சிறுவனின் முதல் வணக்கம்...

தாங்கள் வாழ்த்திற்கு தகுதியானவன் அல்ல ஐயனே... மிகவும் சிறியவன்...

தங்களின் வருகைக்கும், என் மேல் கொண்ட அன்பிற்கும் மிக்க நன்றி...

கண்டீப்பாக தங்கள் பக்கத்திற்கு நேரமிருக்கும் போது வருகிறேன்...

மோகன் என்பது என் எந்தை, மோகனன் என்பது எந்தை போட்ட பிச்சை!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

michel said...

Unga kavithaikal
romba azhaga iruku...

மோகனன் said...

நன்றி தோழா....

தொடரும் உமது ஆதரவிற்கும், தொடரப்போகும் உமது ஆதரவிற்கும் எனது நன்றிகள்

Sangeetha DTERT said...

படத்திற்குக் கவிதையா
கவிதைக்குப் படமா
மிக பாந்தம் இரண்டும்

ஆயினும்
எப்படி இப்படியெல்லாம்
யோசிக்க முடிகிறது.

நன்று தோழரே

மோகனன் said...

கவிதைக்குத்தான் எப்போதும் படத்தைத் தேடுவேன்...

வேண்டுமானால் ஒரு படத்தைக் கொடுங்களேன்... அதற்கு கவிதை எழுத முயற்சிக்கறேன்...

உங்களைப் போன்ற தேவதைகளின் வரத்தால்தான் இப்படி எழுதமுடிகிறது...