ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, June 16, 2011

நான் மட்டும் இங்கே..!



வைகாசி முழுநிலவு
வண்ணம் கலையாமலிருக்க...
ஊரு சனம் எல்லாம்
வண்டி கட்டி சென்றது
வைகையாற்றங்கரையில்
நிலாச் சோறு சாப்பிட...
நான் மட்டும் இங்கே
நீயின்றி நீட்டிப் படுத்திருக்கிறேன்
நம் வீட்டில் அமாவாசையாய்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 )




16 comments:

Natu said...

Very nice line excellent ...........

By

Bhuvana

Natu said...

உள்ளத்தின் வலிகளுக்கு உருவம் கொடுக்காத வரையில்
உண்மையில் நீங்களும் ஞானி தான்

By

Bhuvana

Natu said...

F - ship = Love

இரண்டு உறவுகளுமே இதய
பரிமாற்றம் தான்

நண்பனுக்கு நம்பிக்கை அதிகம்
காதலனுக்கு காப்புரிமை அதிகம்

Because

என் இதயம் நலமா என்று கேட்பவன் நண்பன்
( நட்பு மீது உள்ள நம்பிக்கை )
என் இதயம் நலமா
என்று சோதிப்பவன் காதலன்

By
Bhuvana

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி புவனா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நான் ஞானியல்ல... சாதாரண மனிதன்... காதலியால் சதா ரணப் படும் மனிதன்...

எனை ஞானியாக்க வேண்டாம் புவனா..!

மோகனன் said...

நல்லாவே சோதிக்கிறீங்க..!

சோதிப்பது பெண்களின் குணம்..! சோதனைக்குள்ளாவது ஆண்கள் இனம்..!

Natu said...

ஹலோ நண்பரே ............

சதா ரணப் படும் அளவிற்கு உங்கள் காதலி கொடுரமானவலா...........?

சோதிப்பதும்,சோதனைக்குள்ளக்குவதும் ஆண்களாகிய நீங்கள் தானே .......?

மோகனன் said...

பிரிவால் என்னை ரணப்படுத்துகிறாள் என்றேன்.. அவள் ஒரு ஊரில்.. நான் ஒரு ஊரில்...

என்ன செய்வேன் நான்..?

கலா said...

ஐய்யோ... எனக்குத் தெரியாம்ப் போச்சே..
நானும் வண்டிகட்டிப் போயிருந்தேன்..
முன்னாடிச் சொல்லிருந்தால் ஒரு
இடம்{வண்டியில் மட்டும்} கொடுத்து
அழைத்துப் போயிருப்பேன்!

கலா said...

சதா ரணப் படும் அளவிற்கு உங்கள்
காதலி கொடுரமானவலா...........?\\\\

புவனா உங்களுக்கு விஷயமே தெரியாதா?

காதலைக்“காதலி” யை கடந்து வந்தது வெகு..........
இப்போது..................... ......

மோகனன் said...

வாங்க கலா...

வண்டியில் இடம் தந்திருப்பேன் என்ற உங்கள் அன்பிற்கு நன்றி... நீங்க போங்க நான் என் தலைவி இல்லாம வரமாட்டேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

ஒரு கலாவையே சமாளிக்க முடியாது, இதுல புவனாவை வேற கூட்டு சேர்க்கறீங்களா...

உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா..?

5lee... said...

காத்திருக்கும் போது தானே கண்ணா
அதன் அருமை உனக்கு தெரிகிறது
காத்திருக்கும் போது தான் அவள் மீது உள்ள
பற்று அதிகமாகிறது அப்பொழுதுதான்
உனக்கே தெரியும் நீ அவள் மீது வைத்துள்ள அன்பு.............

இப்படிக்கு

அன்புள்ள (அஞ்சலி)

மோகனன் said...

அஞ்சலி நீங்களும் அழகா கவிதை எழுதறீங்க...

வாழ்த்துக்கள்..!

michel said...

Vaayinaal sutta pun ullarum aarathe (aval) mauvnathal sutta vadu...

மோகனன் said...

புதுக்குறள்தான் தோழா.. அசத்துறீங்க...