ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, June 9, 2011

சொல் எப்படி என்று..?என்னோடு பேசும் போது மட்டும்
உன் பூ முகத்தில்
ஆயிரம் புன்னகை பூக்கள்
ஓரே நேரத்தில்
பூக்கின்றனவே அதெப்படி..?

என்னோடு உரையாடும் போது மட்டும்
மண்ணென்றும் கல்லென்றும்
பாராமல் உன்
மென்தண்டுக் கால்கள்
தானாக கோலமிடுகிறதே அதெப்படி..?

என் கண்ணோடு பேசும் போது மட்டும்
உன் கண்களிரண்டும்
கருவண்டை மறைக்கும்
வண்ணத்துப் பூச்சி போல் 
மிக வேகமாக படபடக்கிறதே அதெப்படி..?

என்னோடு பேசும் போது மட்டும்
உன் முகம் மதி மயக்கும்
மாலை நேரத்து
அடிவானச் சூரியனாய்
சிவந்து போகிறதே அதெப்படி..?

எப்படி எப்படி என்று
உன்னிடத்தில் எதைக் கேட்டாலும்
குழந்தைச் சிரிப்பை
பதிலாகத் தருகிறாயே..?
அதையேனும் சொல் எப்படி என்று..?
--------------------------------------------------


(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 4  )

19 comments:

koodal bala said...

ரோட்டுல பாத்து போங்க .......

மோகனன் said...

கண்டீப்பா... ரோட்டுலதான் பாத்துகிட்டே போறேன்... பயபுள்ள சிக்க மாட்டேங்குறா தோழா...

ஆமா நீங்க எதை பாத்து போகச் சொன்னீங்க..?

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா...

அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

Natu said...

சூப்பரா இருக்கு அசத்துங்க..................!

எப்படி சிக்குவா .................................................................?

By

Bhuvana

Natu said...

புன்னகை

(துன்பம் ) கானல் நீரிலும் மலர்வது (அனுபவ சிரிப்பு )
( இன்பம் ) குளிர்ந்த நீரில் மலர்வது ( குழந்தை சிரிப்பு )
எந்த நீரிலும் மலர்வது ( இறைவன் சிரிப்பு)

மோகனன் said...

வாங்க புவனா...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அவ எங்க சிக்குனா..? அவ 'சிக்'குன்னு இருந்ததால நான்தான் சிக்கினேன்... அவள நேர்ல பார்த்தேன்னா மயங்கிப் போயிடுவேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

யூர்கன் க்ருகியர் said...

காதல் கவிதை -ன்னாலே
பின்றீன்களே தல ...
எப்படி ?

மோகனன் said...

எல்லா சிரிப்பும் சரிதான்...
ஆனால் கடைசியாக சொன்ன சிரிப்பு ஏற்புடையதாக இல்லை...

அவையனைத்தும் இயற்கையின் சிரிப்பு என எழுதினால் நான் மகிழ்வேன்...

வாழ்த்துக்கள்...

மோகனன் said...

வாங்க யூர்கன்...

ரொம்ப நாளாச்சு உங்களை சந்தித்து...

என்ன செய்ய நான் பார்ப்பதெல்லாம் அழகிய கவிதையாக இருக்கிறதே... அதனால் வந்த விளைவுகள்தானோ என்னவோ..?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

இதற்கு முன் எப்போதும் இப்படி இருந்ததில்லை
இப்போது எப்படி எப்படி ஆனதென்றும் புரியவில்லை
புதிரான உன் பார்வை என்னை என் உயிர் வரை ஊடுருவி செல்கிறது
உதடுகள் கூட மிக ரகசியமாய் உன் பெயரையே உச்சரித்து சுகம் காண்கிறது
எப்போது எழுதினேனோ உன் பெயரை என் பாட புத்தகத்தில் தோழிகள் அனைவரும் கேலி செய்தனர்
இது " காதல் " தான் உறுதி செய்தனர்.
குளியலறை சுவரில் கூட உன் முகமே தெரிவதால் குளிகாமலே திரும்புகிறேன் ஆடை களைய வெட்கப்பட்டு
இன்னும் எனக்குள் ஏதேதோ மாற்றங்களை உணர்கிறேன்........உருகுகிறேன்........
இனியவனே...........! என் ஜீவனே.....! என்னை நீ உனக்குள் உணர்வது எப்போது .........?


How is it.

By
Bhuvana

மோகனன் said...

கலக்கறீங்க புவனா...

பட்டய கிளப்பறீங்க... ஒரு பெண்ணின் பார்வையில் இவ்வளவு நளினமாய் மிக அழகாக காதலை சொல்லி இருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள். நீங்களே ஒரு பிளாக் ஆரம்பியுங்களேன்...

கலா said...

எப்படி?எப்படியென்று இப்படி
என்னிடம் கேட்டால்...நான் எப்படிப்
பதில் சொல்லமுடியும்?
ரொம்ப ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு!

சொல் எப்படி என்று.......
பூவையை ஆராய்ந்த ஆய்வில்
அவளை அளந்தெடுத்த அத்தனையும்....
அழகு காட்டுகிறது
நன்றி மோகனன்

மோகனன் said...

வாங்க கலா...

இன்று உங்கள் கிண்டலுக்கு நான்தான் கிடைத்தேன் போல... அத்தனையும் தேன்தான் போங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

5lee... said...

அவள் முகம் வாடியது உன்னை காணாமல்
நி வந்து பேசும் போது தான் அவள் முகத்தில் ஆயிரம் புன்னகை
பூக்கள் ஒரே நேரத்தில் பூக்கின்றன அதெப்படி
அதன் பதில் நீயே...

Natu said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழா .......

மோகனன் said...

எல்லாம் கவிஞிகளின் படையெடுப்பாய் இருக்கிறது இன்று...

5லீ... கலக்கறீங்க 5லீ...

அடிக்கடி (சு)வாசிக வாங்க..!

மோகனன் said...

இதில் வாழ்த்தொன்றுமில்லை... உண்மையைச் சொன்னேன்... அவ்வளவே...

கலா said...

அவ எங்க சிக்குனா..? அவ 'சிக்'குன்னு
இருந்ததால நான்தான் சிக்கினேன்..
. அவள நேர்ல பார்த்தேன்னா
மயங்கிப் போயிடுவேன்...\\\\\\

ஐய்யோ...ஐய்யோ.. எத்தனை பேரில்தான்
மயங்குவது? மயங்கிக் கட்டியது போதாதா?
சிக்கென்னு இருந்தால் சிக்கிறதா?
சிக்கல் வந்தா சிக்கெடுக்கிறது யாரோ...!!...??
சிக்கனக்காரரே பாத்தய்யா...பார்த்து
சிக் குத் தேடிச் சின்னாபின்னமாகாம இருந்தால்
சரிதான்!!

மோகனன் said...

சிக்குவனா நான்... சிக்கமாட்டேனுங்க...

அங்க அன்புக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Bharatanatyam Dancer
Bharatanatyam exponent
Bharatanatyam USA
Bharatanatyam Reviews
Bharatnatyam classes in New Jersey
Dance Schools for Bharatanatyam
Bharatanatyam teachers
Best Bharatanatyam Dancers
Natya shastra scholar
Bharatnatyam classes
Bharatanatyam Karanas
Bharatanatyam Dance Workshop
Dancer Workshop
Workshop for Bharatanatyam Dance