செந்தமிழ்த்தாய் வாழுகின்ற
இத் திருநாட்டில்
எம்மிளைய மகவாய்
பிறந்தாயே என்னகிலா..!
உன் பிறப்பால் நான் உவகை
கொண்டது போதாது!
மீறின் அது குல நலமாகிவிடும்..!
அதை யான் வேண்டேன்..!
இப்புவி உவகை கொள்ளும்படி
செய்து விடு பொன்னகிலா..!
அதுதான் உலக நலமாகும்!
உன் தாய் மனம் குதுகலமாகும்..!
எங்களின் புரட்சி மணத்தில் பூத்த
இரண்டாவது பூமலரே...
என் குடும்பமெனும் பூங்காவில்
முகிழ்த்திட்ட வாச மலரே..!
பிறப்பதுமிறப்பதும் ஓர் முறை...
இருக்கும் வரை இன்பத்தை
அனைவர்க்கும் வழங்கிடு...
அகிலத்தை அன்பால் வளைத்திடு..!
துணிச்சலை ஆயுதமாக்கி...
தூய அறிவை துணையாக்கி...
தமிழை அமுதாக்கி...
தடைகளனைத்தையும் உடைத்திடு..!
சமதர்ம உலகின் தலைவன்
நீதான் எனக் காட்ட
சரித்திரத்திதை மாற்றி எழுதிட
துணிந்து எழுந்திடு..!
இங்கே முத்தமிழும் மூன்று
முக்கனியும் மூன்று
உன் அகவையும் மூன்று
என் மகிழ்சிக்கு இதுவே சான்று!
உலகிலுள்ள எல்லா நலங்களும்
வளங்களும் உன்னடி சேர
இந்த மூன்றாமாண்டில்
முத்துக் கவி பாடுகிறேன்..!
என் இளஞ்சேயே உன் வடிவில்
எந்தையைக் காணுகிறேன்
இன்று போல் என்றும் வாழ
உந்தை புதுக்கவி பாடுகிறேன்..!
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!
இவ்வகிலம் இருக்கும் வரை
என்னகிலா நீ வாழ்கவே..!
(எனது இளைய மகனுக்கு மூன்றாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )
14 comments:
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
By
Bhuvana
முதல் ஆளாய் வாழ்த்து சொன்ன உங்களுக்கு அகிலனின் சார்பில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
மோகனன் நீங்கள் வாழ்த்திய...
அத்தனை வாழ்த்துகளுடனும்
நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்
அகிலனை.
என் அன்பு முத்தத்தை பரிசாக
அனுப்புகிறேன் பூவாய்ச்
சிரிக்கும்அகிலனிடம்...
அன்பான கலாவிற்கு...
தங்களின் அன்பு கலந்த வாழ்த்துக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Good morning
3 vathu pirantha naal kaanum unkal makankku enkalathu ithayap poorvamana nal vazhthukal
By
BABU
Many Many Happy Returns of the day..!
Happy Birth day to Agila kutty.
best wishes for ur sweet kutti chellam....
-karthik
அன்பு நண்பர் சுரேஷ் பாபுவிற்கு...
தங்களின் மனமார்ந்த வாழ்த்திற்கு, அகிலனின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அன்பு நண்பர் சதீஷ் குமார்...
தங்களின் அன்பான வாழ்த்திற்கு, அகிலனின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
தோழர்கள் தமிழ் செல்வம், கார்த்திக் அவருகளுக்கு...
தங்களின் வாழ்த்தால் என் மனம் மகிழ்வடைகிறது.. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்புச் செல்லம் அகிலனுக்கு
முத்தான மூன்றாம் அகவையின்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஈன்ற பொழுதின் பொ்துவக்கும் தன்மகனைச் சான்றோன்
எனக் கேட்டத் தாய்
என்ற வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப
வாழ்ந்திட வாழ்த்துக்கள்..!
- ஜோதி
என் மகவை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அழைப்பிதழ்:
இன்றைய வலைச்சரத்தில் - “கொன்றைப்பூ - வாழ்த்துச்சரம்” என்ற தலைப்பில் - உங்களுடைய இந்த பதிவினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.....
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_04.html
வலைச்சரத்துக்கு வரவேற்கிறேன்.
நட்புடன்
வெங்கட்
நன்றி தோழரே...
Post a Comment