பணிக்கு ஆள் எடுக்கிறார்கள்
என்றறிந்து மனுப் போட்டேன்..!
'எழுத்துத் தேர்வு எழுது..?' என்றனர்
எழுதி முடித்தேன்..!
'உடல் தேர்வில் தேறு..?' என்றனர்
தேறி முடித்தேன்..!
முடிவாய்...
நேர்முகத் தேர்விற்கு
நேர்மையான சான்றிதழ்களோடு
வா என்றனர்..!
என் சான்றிதழ்களின்
நேர்மையை ஆய்வு செய்த பின்
நேராய்க் கேட்டார்கள்
'இப்பணியில் சேரவேண்டுமெனில்...
இவ்வளவு லஞ்சம் தரவேண்டும்..!
நீ எவ்வளவு தருவாய்..?'
4 comments:
பஞ்சப்படும் நாடுகளில் கூட
லஞ்சம் தலைவிரித்தாடுகிறது
எப்படித்தான் ஒழிப்பது???
நல்ல சிந்தனை நன்றி
பஞ்சத்தில் பிறப்பதல்ல லஞ்சம்... சுயநலப் பணப் பேய்களினால் விளைவதுதான் இந்த லஞ்சம்..!
வருகைக்ககும், பின்னூட்டத்திற்கும் இனிய நன்றிகள் தோழி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வணக்கம்
23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு எனது வாழ்த்துக்கள் அத்தோடு இப்படிப்பட்ட கயவஞ்சக நெஞ்சம் உடைய கூட்டங்களை அடியோடு அழிக்க வேண்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
இளைஞர்கள் கையில் இந்தியா...
அந்த இளைஞர்களும் இச்சகதியில் சிக்காமல் இருந்தால்... வருங்காலம் லஞ்சமற்று இருக்கும் நமது சந்ததிக்கு...
தங்களின் சிந்தனைக்கு எனத்உ வாழ்த்துக்கள் ரூபன்...
Post a Comment