ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 28, 2011

உதட்டினில் ஒன்று குவித்து..!


தொலைதூரத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகளை எல்லாம்
உதட்டினில் ஒன்று குவித்து
அலைபேசி வழியே அனுப்புகிறாய்
அன்பு முத்தமாக..!
அலைகடல் தாண்டி
அதிர்வலைகளின் வழியே
பயணித்து வரும் 
அம்முத்தம்
என் செவியினைத் தீண்டி
உன் அன்பைச் சொல்கிறது
சத்தமாய்... அதுவே எனக்கு சத்துமாய்..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )




8 comments:

Natu said...

தொலைதூரத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகளை எல்லாம்
உதட்டினில் ஒன்று குவித்து
அலைபேசி வழியே அனுப்புகிறாய்
அன்பு முத்தமாக..!




யாருப்பா அது..................?
உங்க வீட்டுகாரம்மா நம்பர் கொடுங்கோ கொஞ்சம் பேசணும் .......?

By

bhuvana

மோகனன் said...

கவிதையை ரசிக்கணும்.. இப்படி கலாய்க்க கூடாது...

கொடுத்ததாலே என் மனைவிதானே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

மோகனன் நலமா?
இது உறுதியாக...மனைவிக்கு அல்ல...
அவர்கள் தான் உங்களுடன் வசிக்கின்றாரே!

இது சத்தியமாய்...உண்மையாய்..நிஜமாய்...
நானும் இல்லையப்பா.....

யாரந்த மர்மமலர்?
புவனா..நீங்களா? திட்டவேண்டாம்ம்மம்மம்மம்மம்மம்ம

இருந்தாலும்
என் செவியினைத் தீண்டி
உன் அன்பைச் சொல்கிறது
சத்தமாய்... அதுவே எனக்கு சத்துமாய்..!\\\\\

இவ்வளவு சத்தமாகவா கொடுப்பார்கள்?

இக்கவி நல்ல ஊட்ட ச் சத்து

Unknown said...

அம்முத்தம்
என் செவியினைத் தீண்டி
உன் அன்பைச் சொல்கிறது
சத்தமாய்... அதுவே எனக்கு சத்துமாய்

தம்பீ
செவ்வரி படர்ந்த உதடு
களை விட மேலே சுட்டியுள்ள
இவ்வரி-கள் மயக்கம் தரக் கூடிய
ஓவியமாக,சொற் காவியமாக உள்ளன
வருகைப் பதிவுக்கு நன்றி

புலவர் சா இரமாநுசம்

Natu said...

வாங்க கலா நலமா....................?

ஏன் உங்களுக்கு எப்படி ஒரு சந்தேகம் தோன்றியது..............?
கண்டிப்பா அந்த மர்ம மலர் நானும் இல்லை......
வாங்க இருவரும் சேர்ந்து கேட்கலாம் யார் அந்த மர்ம மலர்ன்னு ....!

by

புவனா

மோகனன் said...

வாங்க கலா...

வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க குசும்பை...

இதுல புவனாவையும் கூட்டு சேத்துகறீங்க..? என்னை ஒரு வழி ஆக்காம விடமாட்டீங்க போலிருக்கு..!

மர்ம மலர் அல்ல.. என் மனங்கவர்ந்த மலர்தான்... அவள் என் இல்லாள்தான்..!

தங்களின் சத்தான பின்னூட்டதிற்கு மட்டும் நன்றி... கிண்டலுக்கும், சிண்டு முடிதலுக்குமல்ல...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

புலவர் சா இரமாநுச அவர்களுக்கு...

தங்'கள்' பின்னுட்டமும் அப்படித்தான் இருக்கிறது... அடியவன் சிறியவன்... பிழை'கள்' இருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க புவனா...

கலாவுடன் கூட்டணியா... என் மனதிற்குள் இருப்பவளை அவளறிவாள்... நீங்க கவலைப் படாதீங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!