ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, February 15, 2010

முழு நிலவு உதிக்குமா?அதிகாலையில்
முழு நிலவு உதிக்குமா?
என்று என்னிடம் கேட்டார்கள்...
உதிக்குமென்றேன்..!
'போடா நீ பொய் சொல்கிறாய்..'
என்றார்கள்..!
அதி காலையில்
உன் முழு நிலவு முகத்தைப்
பார்த்த பின்னும்...
பார்க்கவில்லை என்று
என்னால் பொய்யுரைக்க
முடியவில்லையடி அன்பே..!

(காதலர் தினத்தன்று அதிகாலை 6. மணிக்கு நானும் என்னவளும் சந்தித்துக் கொண்டோம்... அதையே கவிதையாக வடித்து அவளிடம் அனுப்பினேன்... அளவற்ற ஆனந்தமடைந்தாள்... அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்..)4 comments:

சிநேகிதி said...

ஆஹா.. காலையிலே ஐஸ்சா? ... ரொம்ப அழகாக எழுதியிருக்கிங்க.. குடும்ப வாழ்க்கையில் அப்ப அப்ப இப்படி காதலி/மனைவியினை பார்த்து சொன்னால் அன்பு அதிகமாகும்.

மோகனன் said...

இது ஐஸ் அல்ல தோழி...

உண்மையில் அன்று அதிகாலையில், அவள் முகத்தை நேரில் கண்டதும் என் மனதில் தோன்றியது இதுதான்...

அவ்வளவு அழகு அவள்...

எங்களன்புக்கு எல்லையில்லை..

வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

திவ்யாஹரி said...

காலையில் பார்த்ததும் கவிதையா? கொடுத்து வைத்த பெண் தான் நண்பா உங்கள் காதலி.. வாழ்த்துக்கள்..

மோகனன் said...

தங்கள் வருகைக்கும், வாழ்திற்கும் மிக்க நன்றி தோழரே..!