ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Sunday, February 14, 2010

இத்தனை நாளாய்..!


என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?

(உலக காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்…)4 comments:

யாதவன் said...

good nice keep writing

மோகனன் said...

நன்றி தோழரே..

தங்களுடைய வருகைக்கும், மேலான கருத்திற்கும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

S Maharajan said...

"என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!

அருமையான வரிகள்!
வாழ்த்துக்கள் நண்பரே.

மோகனன் said...

தங்களுடைய வாழ்த்து என்னை மகிழ வைக்கிறது தோழரே...

தங்களுடைய வருகைக்கும், மேலான கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!