ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, April 10, 2010

மந்தகாசப் புன்னகை..! - 150வது கவிதைப் பதிவு..!


வெள்ளி நிலவு
அழகாய்
வானத்தில் வீற்றிருக்க…
அதன் அழகை
மறைக்க நினைத்த
தென்னங்கீற்று…
தன் கீற்றுக் கரங்களை
விரித்தபடி
நிலவை மறைத்தது..!
அக்கீற்றினூடே
தெரிந்த அந்நிலவு
முன்பை விட
மிக அழகாக சுடர் விட்டு
பிரகாசித்தது மட்டுமின்றி...
மனதை மயககும்படியானதொரு
மந்தகாசப் புன்னகையொன்றையும்
உதிர்த்தது..!
அது போலத்தான்
உன் நிலவு முகத்தை
உன் கற்றை முடி மறைப்பதும்...
அதனூடே நீ மந்தகாசப்
புன்னகை புரிவதும்..!

(இது என்னுடைய 150-வது பதிவு ஆகும்... எனைப் படைத்த என் பெற்றோர்களுக்கும்... என் கவித்திறனை வளர்த்து விட்ட என் தாய்த்தமிழுக்கும்... இக்கவிதைகளின் ஊற்றான என்னவளுக்கும்... ஆதரவுக் கரம் நீட்டி வரும்... எனது அன்பு வாசகர்களாகிய உங்களுக்கும்.. எனது மனமார்ந்த நன்றிகள்...

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)



2 comments:

கலா said...

மயங்க ,,,..வைக்கும் மங்கையின்
கண்ணழகும்,கற்றையாய் கனக்கும்
குழலழகும் மனதைக் கொள்ளை
கொள்கிறது.
உங்கள் கவியும் சளைத்ததல்ல
நிலவாய்..உலாவருகிறது.

மோகனன் ..
தமிழுக்கு அமுதென்று பெயர்
அந்தத்
தமிழ் இன்பத்
தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்....

என மூச்சாய் சுவாசிக்கும்
உங்களுக்கும்,உங்களைப்
போன்றவர்க்கும் தமிழ்த்
தாயின்,தமிழ் மக்களின்
ஆசியும்,வாழ்த்தும் என்றென்றும்
உண்டு .அதில்..
இவள் வாழ்த்தும்!!

மோகனன் said...

அன்பான தோழிக்கு..

தங்கள் வாழ்த்து எனக்கு உண்மையில், மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது...

தங்களின் மேலான ஆதரவிற்கும், வாழ்த்திற்கும்... அடியவனின் அளவில்லாத நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!