ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, April 6, 2010

பத்துத் திங்கள் எனைச் சுமந்து..!

திருமதி. வள்ளி மோகன்ராஜி. திரு. வீ. மோகன் ராஜி

மோகனத்தின் முதல் விந்தையே
உம்முயிரிள் ஓருயிரை
எனக்கீந்த எம்மன்புத் தந்தையே...
நின் திருத்தாழடி சரணம்..!

வள்ளி மணவாளரின்
வண்டமிழ்ச் சதியே...
பத்துத் திங்கள் பாங்காய்
எனைச் சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்தாயே..!
உன் திருவடி சரணம்..!

உறவற்ற இவ்வுலகில்
உருக்கொடுத்து...
உயிர்க்கொடுத்து...
நல்லுடலையும் கொடுத்தாயே..!
நின் மலரடி சரணம்..!

அன்னைக் கிணையாக
அன்பு காட்டி...
அறிவைப் புகன்று...
உம் மகன்ற மார்பில்
எனைச் சுமந்த எந்தையே...
தங்களின் எழிலடி சரணம்..!

உங்களைப் போலொரு
உத்தமத் தம்பதிகளின் ஒரு
மகவாய் பிறந்ததென் பாக்கியம்...
எனை ஆளாக்க நீங்கள்
பட்ட துன்பங்கள் அனைத்தும்
என் கண்ணில் நீர்க்குளம்..!

எம்மைப் படைத்த
என் பிரம்மாக்களே...
என்றுமுங்கள் மகவாய்ப்
பிறக்கும்படியான
வரமொன்றை அருளுங்கள்..!
எனைப் பிறப்புவித்த இந்நாளில்
மட்டுமன்றி...
எந்நாளுமெனைக் காத்தருளுங்கள்..!

ஆண்டுகள் இருபத்தியொன்பதானாலும்
என்றுமுங்கள் நனி மகவே நான்..!
இதே நாளில் உங்களின்
பொன் மடியில்
நான் முதன் முதலாய்
துஞ்சியதைப் போல்...
இன்றும் துஞ்ச வேண்டுமென்ற
எண்ணமென் மனதில்
தோன்றுகிறது எந்தைகளே..!

பணி நிமித்தம் காரணமாய்
தங்களைப் பிரிந்து வாழ்ந்தாலும்
என்றுமுங்கள் ஆசிகளுடனே
நடை பயின்றுக் கொண்டிருக்கிறேன்
என் வாழ்க்கையில்..!
எந்தைகளே எனை வாழ்த்தியருளுங்கள்..!
4 comments:

கலா said...

பெற்றோர்கள் எமக்குச் செய்தவைகளை
நாம் நாலுவரிக் கவிதையில் நன்றி
செலுத்த முடியாது கோகனன்!

இருந்தாலும்......இக் கால கட்டத்தில்
{பெற்றோரை பாரமென நினைக்கும்}
நீங்கள், உங்கள் மன மாளிகையில்
அவர்களை வைத்து .....
எழுதிய வரிகள்
அருமை நன்றி.

மோகனன் said...

அன்பான கலா அவர்களுக்கு...

தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான்... என் ப்ற்றோர்களை என்றும் பாரமென நினையேன்...

6.4.10 அன்று எனது பிறந்தநாளாகும்... ஆகவே என் பெற்றோர்களுக்காக இக்கவிப் படையல்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

sangeetha said...

இதே நாளில் உங்களின்
பொன் மடியில்
நான் முதன் முதலாய்
துஞ்சியதைப் போல்...
இன்றும் துஞ்ச வேண்டுமென்ற
எண்ணமென் மனதில்
தோன்றுகிறது எந்தைகளே..!

did u read these lines in front of ur beloved parents?

nice lines.

மோகனன் said...

படித்துக் காட்டவில்லை சங்கீதா...

வாய்ப்பு கிட்டும் போது என் தந்தையையே படிக்க வைக்கிறேன்...

வசந்தத்தின் வருகைக்கு நன்றி!