ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, April 20, 2010

என்னோடு நீ செய்த பயணம்..!


நேற்றைய பொழுது
என்னோடு நீ செய்த பயணம்...
என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்
இனிப்பையும் ஊட்டியது..!
நீ என்னோடு
பேசிக் களித்த நிமிடங்களும்...
சீண்டி விளையாடிய தருணங்களும்...
செல்லமாய் அடித்த நிகழ்வுகளும்...
என்னோடு கைகோர்த்து
நடந்த நடையழகும்...
என் கையில் கல்வெட்டாய்
உன் காதலை பதிவுசெய்த
எழுத்தழகும்...
எனை முழுவதுமாய்
ஆட் கொண்டு விட்டன..!
அன்பிற்கினியவளே...
மீண்டுமொரு அதே
நாளிற்காக ஏங்குகிறேன்..!
தேங்குகிறேன்...!
உன்னிடம் மன்றாடுகிறேன்..!
வா என்னோடு...
மீண்டுமொரு வசந்தகால பயணத்திற்கு..!2 comments:

+யோகி+ said...

\\என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்
இனிப்பையும் ஊட்டியது..!\\

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்
நல்லா இருக்கு,தொடர்ந்து எழுதுங்க
அப்டியே என்னோடதையும் பாருங்க

www.naankirukiyathu.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

மோகனன் said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!