ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, April 13, 2010

உன் மீன் விழிகளை..! - குறுங்கவிதைகள்


என்னை மட்டுமல்ல
என் நினைவுகளையும் சேர்த்து
வசியம் செய்திருக்கிறாய்
என்பதை…
நீ என்னருகே
இல்லாத போதுதான்
உணர்ந்து கொண்டேன்..!

                    *** + ***

பெண்ணே…
உன் மீன் விழிகளை
மூடிக் கொள்..!
மீனவன் வலையுடன்
வந்து கொண்டிருக்கிறான்..!

                    *** + ***
அழகின் சிகரம் நீ…
அறிவின் சிகரம் நீ…
பெண்மையின் சிகரம் நீ…
பேரழகின் சிகரம் நீ…
பொறுமையின் சிகரம் நீ…
பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!

                    *** + ***

நடமாடும் நூலகத்தைக்
கண்டேன்
நடமாடும் வங்கியைக்
கண்டேன்
நடமாடும் கவிதையைக்
கண்டேன் என்றால்
அது நீதான் அன்பே..!

                    *** + ***

வீணை இசைக்காமலேயே
நாதம் எழுகிறதடி
உன் குதுகலப் பேச்சில்..!


                    *** + ***
10 comments:

சே.குமார் said...

நல்லாயிருக்கு.

கலா said...

பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!\\\\

ஒத்துகிட்டீர்கா!?

தவளை தன் வாயாலே.......????

என் அன்பின்
தமிழ் புத்தாண்டு
வாழ்த்துகள்
உங்களுக்கும்,உங்கள்
உயிரிலும் மேலான மனைவிக்கும்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மோகனன் said...

நன்றி நண்பா..!

மோகனன் said...

அன்பான தோழிக்கு...


கெட்டாலும்.. அவளிடம்தான் கெடுவேன்..! பட்டாலும்... அப்படியே..!

தங்களுக்கும் எனது தமிழிப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

போகி குழுமத்தாருக்கு எனது நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல கவிதை

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

மோகனன் said...

உலவு குழுமத்தாருக்கு...

எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

சி. கருணாகரசு said...

நடமாடும் வங்கியைக்
கண்டேன்/

ரொம்ப வசதியான இடமோ!

கவிதை கலக்கல்.

மோகனன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகைபுரிந்தமைக்கும்... வாழ்த்தியமைக்கும்...
மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!