ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, July 28, 2010

நான் மறைந்து போனாலும்..! - 200வது கவிதைப் பதிவுஎன் கண் வழியே உனை நுழைத்து…
என் மனதினிலே உனை நினைத்து…
என் கவிதையிலே வடித்து வைத்தேன்..!
இப்புவியிலிருந்து நான் மறைந்து
போனாலும்
அன்பே...
உன் மேல் நான் கொண்ட காதல்…
என் கவி உள்ள வரை
இப்புவியில் நிலைத்திருக்கும்

என்பதை மறவாதே அன்பே..!
நானாவது உனை மறந்து போவதாவது..?    
நாவிருக்கிறது என்பதற்காக
நறுக்குத் தெரிக்கும் வார்த்தைகளை
வீசியெறியாதே பெண்ணே...
வீழ்ந்து விடுவேன் நிரந்தரமாக..! 

(இது என்னுடைய 200-வது கவிதைப் பதிவு ஆகும்... இந்நேரத்தில் எனைப் படைத்த என் பெற்றோர்களுக்கும்... என் கவித்திறனை வளர்த்து விட்ட என் தாய்த்தமிழுக்கும்... இக்கவிதைகளின் ஊற்றான என்னவளுக்கும்... ஆதரவுக் கரம் நீட்டி வரும்... எனது அன்பு வாசகர்களாகிய உங்களுக்கும்.. எனது மனமார்ந்த நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் ஆதரவு..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்


மோகனன்)
12 comments:

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

மோகனன் said...

தகவலிற்கு மிக்க நன்றி..!

கலா said...

மோகனன் முதலில் என்
வாழ்த்துகள்
மேலும்,மேலும் எடுக்கட்டும்
தமிழ் தாகம்!!


என் கண் வழியே
உனை நுழைத்து…
என் மனதினிலே
உனை நினைத்து\\\\\\\
உங்கள் காதல் தேவதையை..
அன்பு ஊற்றெடுக்கும் மனைவியை...
செல்வங்கள் பெற்றெடுத்த பெண்மையை...
சேவையை ஏற்றெடுக்கும் தாரத்தை...
தரம் கண்ட நாளெனச் ....
சாற்றுகிறேன் உங்களுக்கு

{இன்று உங்கள் இல்லாளைச் சந்தித்த
நாளாய் இருக்கலாம்,.........}

மோகனன் said...

அன்பான தோழிக்கு..

தங்களின் அன்பான வாழ்த்திற்கு எனது மனமார்ந்த நன்றி..!

தாங்கள் சொல்வது உண்மைதான்... அவளின் அன்பினில் கரைந்துருகி எழுதிய கவிதை இது... என்னை மறந்துடுவியா என அவள் என்னிடம் கேட்டதற்கு... பதிலாய் வடித்த கவிதை இது...

தங்களைப் பற்றி என்னவளிடம் தினமும் சொல்லுவேன்..! ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாள் என் யாழினி..!

மெர்சி said...

மோகனன் அவர்களுக்கு ,

தங்களின் 200 வது கவிதைக்கு என் வாழ்த்துக்கள். தமிழில் தங்களின் பணி மென் மேலும் சிறந்து விளங்கவும் ,

தங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கவும் நான் கடவுளை பிராத்திக்கிறேன்.


என்றும் நலமுடன் வாழ வாழ்த்தும்...

மெர்சி

மோகனன் said...

அன்பான மெர்சிக்கு...

தங்களுடைய வாழ்த்திற்கு மிக்க நன்றி...

கடவுளே இல்லை என்பவன் நான்... உம் போன்ற அன்பு உள்ளங்களின் அன்பு மட்டுமே என்னை வளப்படுத்தும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Ramachendran Niranjan said...

Best Of Luck for 200..!

மோகனன் said...

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Niranjan said...

Wish All The Best

மோகனன் said...

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி நிரஞ்சன் அவர்களே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

யாழினி கணேசன் said...

200-வது கவிதை பதிவிட்டது சந்தோஷத்தை தருது...

இன்னும் நிறைய நீங்க எழுதணும்..! அதை பார்த்து இன்னும் நான் சந்தோஷப் படணும்..!

அன்புடன்

யாழினி கணேசன்

மோகனன் said...

உங்களோட மகிழ்ச்சிக்காத்தான் இதை எல்லாம் எழுதறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!